திருநங்கையாக விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்

ஆரண்யகாண்டம் என்ற மிகப் பெரிய வெற்றி படத்தை கொடுத்த, இயக்குனர் தியாகரஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்திருக்கும் சூப்பர் டீலக்ஸ் படம் இன்று வெளியாகியுள்ளது.

ஆரய்ண்யகாண்டத்தைப் போன்றே படம் மிரட்டலாக உள்ளதா? விஜய்சேதுபதி, சமந்தா, நஷ்ரியாவின் கணவர் பகத் பஷீல் ஆகியோரி நடிப்பு படத்தை தூக்கி நிறுத்தியுள்ளதா என்பதை பார்ப்போம்.

படத்தோட கதை சொல்லட்டா

மூன்று சிறுவர்கள்

படத்தில் இருக்கும் மூன்று சிறுவர்கள் ஆபாச படம் பார்ப்பதற்காக, தன்னுடைய நண்பனின் வீட்டிற்கு சென்று வாங்கி வந்த சீடியை போட்டு பார்க்கின்றனர்.

அப்போது அந்த படத்தில் மூன்று சிறுவர்களில் ஒருவரின் தாய்(ரம்யாகிருஷ்ணன்) ஆபாச பட நடிகையாக நடித்திருப்பார். இதனால் கோபமடையும் சிறுவன் ரம்யா கிருஷ்ணனை கொலை செய்ய செல்கிறான். அதன் பின் என்ன நடக்கிறது என்பது ஒரு கதை.

திருநங்கையாக விஜய் சேதுபதி

திருநங்கை ஆவதற்கு முன்பே விஜய்சேதுபதி, காயத்ரியை திருமணம் செய்துவிட்டு வீட்டை விட்டு ஓடிவிடுகிறார். அதன் பின் ஒரு கட்டத்தில் வீட்டிற்கு வருவார் என்று தெரிந்தவுடன் ஒட்டு மொத்த குடும்பமே எதிர்பார்க்கும் போது திருநங்கையாக வந்து நிற்கிறார்.

பல வருடங்கள் கழித்து அப்பா வருவார் என்று எதிர்பார்ப்பில் ஜீ தமிழில் பிரபலமான அஸ்வந்த் நின்று கொண்டிருக்கும் போது, அவன் விஜய்சேதுபதியை இந்த கோலத்தில் பார்த்தவுடன் என்ன செய்கிறான்? ஒரு திருநங்கை சமூகத்தில் எப்படிப்பட்ட பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பது கதை.

பகத்பாசல்-சமந்தா

பகத்பாசலை திருமணம் செய்து வாழ்ந்து வரும் சமந்தா, ஒரு கட்டத்தில் தன்னுடைய முன்னாள் காதலனை வீட்டிற்கு அழைக்கிறார். அப்போது இருவரும் நெருக்கமாக இருக்கும் போது அவன் இறந்துவிடுகிறான்.

இந்த விஷயத்தை பகத்பாசலிடமே சமந்தா சொல்லா அதன் பின் அவர்கள் அந்த உடலை மறைப்பதற்காக போராடுகின்றனர். இறுதியில் உடலை மறைத்தனரா? இல்லையா?

மிஷ்கின்-ரம்யாகிருஷ்ணன்

மிஷ்கின் சுனாமி அலையில் ஒரு சிலையால் காப்பாற்றப்படுகிறார். அந்த சிலை தான் நான் உயிர்பிழைத்ததற்கு காரணம் என்று கூறி, கடவுளின் பெயரையே கூறிக் கொண்டிருப்பார்.

இவர் ரம்யாகிருஷ்ணனின் கணவனாகவும் நடித்திருப்பார். இறுதியில் மகனை காப்பாற்றுவதற்கு ரம்யாகிருஷ்ணன் ஓடிக் கொண்டிருக்கும் போது, அப்போதும் கடவுளையே சொல்லிக் கொண்டிருப்பார், இறுதியில் கடவுள் காப்பாற்றியதா? இல்லை சூழ்நிலை காப்பாற்றியதா?

படத்தின் கரு

இந்த உலகம் நாம் என்ன செய்து கொண்டிருந்தாலும் சென்று கொண்டே தான் இருக்கும், உலகில் பல்வேறு வகையான மக்கள் வாழ்கின்றனர். அதில் ஒருவர் செய்யும் தவறு சிலருக்கு நல்லதில் போய் முடிகிறது? சிலருக்கு எதிர்வினையாக முடிகிறது என்பதே சுருக்கம்.

தியேட்டரில் விசில் பறந்த இடங்கள்

விஜய் சேதுபதி ஒரு திருநங்கையாகவும், சமந்தா ஒரே ஒரு தவறால் அனுப்பிவிக்கும் பிரச்சனையில் செம ஸ்கோர் செய்திருப்பார். அதே போன்று பகத் பாசலில் நடிப்பை பார்க்கும் போது இத்தனை தமிழ் சினிமா சரியா பயன்படுத்தலையோ என்ற கேள்வி?

அதே போன்று ஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன் சொல்லும் ஒரு வசனம், ”ஆபாச பட நடிகைகளையே குறை சொல்லும் இந்த மக்கள் , பார்ப்பவர்களை ஏன் குறை சொல்ல மறுக்கிறது” என்று கூறும் போது தியேட்டரில் தானாக கை தட்டு வருகிறது.

மூன்று சிறுவர்கள் தான் படத்தினே தூண் என்று சொல்லலாம்.

லாஜிக் மீறல்

படத்தில் லாஜிக் மீறல் என்றால் டப்மாஸ் மிர்ளானி தான் அவர் ஏன் ஏலியனாக வருகிறார். அது கதைக்கு தேவையே இல்லையே என்று தோன்றுகிறது?

மொத்ததில் சூப்பர் டீலக்ஸ் எப்படி?

படம் பார்க்க செல்பவர்களை திருப்திபடுத்தும், நல்ல ஒரு கதைக்களம் தைரியாக சென்று பார்க்கலாம்.