இந்த பிக்பாஸ் சீசனில் முதன் முதலில் போடப்பட்ட குறும்படம்… வனிதாவின் முகத்திரை கிழிப்பு

பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட கொலையாளி டாஸ்க்கை, வனிதா வெற்றிகரமாக செய்து முடித்தார். ஆனால் அவர் தான் கொலையாளி என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

போலீஸ் இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்ட கவீனையும் வனிதா கொலை செய்துவிட்டதால், இந்த டாஸ்க் ஒரு கட்டத்தில் கொலையாளியை கண்டுபிடிக்க முடியாது என்று பிக்பாசுக்கு தெரிந்துவிட்டது.

இதனால் இந்த பிக்பாஸ் வீட்டின் கொலையாளி நான் தான் எனவும், என்னுடைய கூட்டாளி தர்ஷன் எனவும் வனிதா கூற, அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

அதன் பின் வனிதா எப்படி எல்லாம் கொலை செய்தார் என்பதை, பிக்பாஸ் வீட்டில் இருந்த டிவியில் பிக்பாஸ் குறும்படம் போட்டு காண்பித்தார்.