சன் டிவி சீரியலில் வந்த அந்த காட்சி…. வெளுத்து வாங்கிய சின்மயி!

தமிழ் சினிமாவில் பிரபல பாடகியான சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்த பின்னர் அடுக்கடுக்காக, பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

இவருக்கு சிலர் ஆறுதல் கூறி வந்தாலும், திரையுலகை சேர்ந்தவர்களே, இவரை எதிர்த்தும் வருகிறார்கள்.

இந்த நிலையில் டுவிட்டரில் ரசிகர் பாடகி சின்மயிக்கு டுவீட் செய்திருந்தார், அதில் நேற்று மாலை ஒரு சீரியலில் ஒரு பெண்ணை பழி வாங்குவதாக எண்ணி அந்த பெண்ணின் சொந்த சகோதரியே ரவுடியை வைத்து பலாத்காரம் செய்ய சொல்கிறார்.

இந்த காட்சியை 15 நிமிடத்திற்கு மேல் செல்கிறது. அதிலும் அந்த பெண்ணை 10 முறை பலாத்காரம் செய்ய வேண்டும் என்று அந்தப் பெண்ணின் சகோதரியே அந்த ரெளடிகளிடம் கூறுகிறார். அந்த தொலைக்காட்சி தொடர் வேறு எதுக்கும் இல்லை சன் தொலைக்காட்சியில் தினந்தோறும் மாலை 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் கல்யாண வீடு தொடர் தான் என்று குறிப்பிட்டிருந்தார்.

ரசிகரின் இந்த டுவீட்டை கண்ட சின்மயி இது போன்ற காட்சிகளை நீங்கள் டிவி தொடர்களில் கண்டால், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்திற்கு நீங்கள் புகார் அளிக்கலாம் என்று குறிப்பிட்டதோடு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சருக்கு டேக் செய்துள்ளார்.

தற்போது இது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.