தேவர் மகனில் இருக்கும் இந்த குழந்தை நட்சத்திரம் தான் இப்போ மிகப் பெரிய சீரியல் நடிகை! நீங்களே அதை பாருங்க

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் பரபலமடைந்தவர்கள் பலர் உண்டு.
அப்படி சிறு வயதில் நடிகத்துவங்கி இன்று படங்கள் மற்றும் டீவி சீரியல்களில் நடித்தவர் நடிகை நீலிமா.

1986 இல் சென்னையில் பிறந்த நீலிமா தமிழில் 1992-இல் வெளியான சிவாஜி மற்றும் கமல் நடித்த தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார்.

அந்த படத்தில் பால் வண்ணம் மாறா சிறுமியாக சிவாஜியின் பேத்தியாக நடித்த நீலிமா பல்வேறு படங்கள் மற்றும் சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கினார்.

பின்னர் பிரசாந் குழந்தை விரும்புகிறேன், சிம்பு நடித்த தம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமக நடித்தார்.

மேலும் சில வருடங்கள் கழித்து மொழி , ராஜாதி ராஜா,சந்தோஷ் சுப்ரமணியன், நான் மஹான் அல்ல போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்தார்.

இவர் நான் மஹான் அல்ல படத்திற்காக சிறந்த துணை நடிகை என்ற விருத்தினையும் பெற்றுள்ளார்.

இவர்நடித்த முதல் சீரியல் 1998 தெலுங்கில் வெளியான இதி கதா காது என்ற தெலுகு சீரியளில் தான்.

அதன் பின்னர் இவர் தமிழ்,தெலுகு, மலையாளம் என பல இவர் நடித்துள்ளார். மேலும் 15 கும் மேற்பட்ட தமிழ் மெகா சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடன் சீரியளில் நடித்த அஷ்வின் என்பவரை திருமணம்செய்துகொண்டார்.

தற்போது சன் டிவி யில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் வாணி ராணி சீரியலில் நடித்து வருகிறார்.

இந்த புகைப்படத்தைக் கண்ட இணையவாசிகள் பலரும் நீலிமாவா இது நம்ப முடியவில்லையே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.