என் 2 மனைவியும் ஒன்னா வீட்டுல விட்டுட்டு வந்திருக்கேன் சார்… கமலிடம் புலம்பி தள்ளிய சித்தப்பு

பிக்பாஸின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

சற்றுமுன்னர் வெளியான ப்ரோமோவில் யாரை வீட்டில் தங்கவைப்பது என்ற கார்ட் பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பதாக கமல்ஹாசன் கூறிய நிலையில் வீட்டுக்குள் இருந்தவர்கள் கார்டை தேடினார்கள்.

அப்போது கார்ட் சரவணன் கையில் கிடைத்தது, அதில் அவர் பெயர் இருந்த நிலையில் என்னை வெளியே அனுப்ப போகிறீர்கள் என நினைத்தேன், ஆனால் காப்பாற்றப்பட்டு விட்டேனா என கூறினார்.

பின்னர் சரவரணன் கூறுகையில் இதில் வித்தியாசமான அனுபவம் என்னவென்றால் என் இரண்டு மனைவிகளையும் ஒரே வீட்டில் விட்டு வந்திருக்கிறேன் என்றார்.

இதையடுத்து கமல்ஹாசன், நீங்கள் பதறியது குழந்தைகளுக்காக இல்லையா என கிண்டலாக அவரிடம் கேட்டார்.