நடிகராக களமிறங்கிய சரவனாஸ்டோர் அண்ணாச்சி.. அதிரடி அறிவிப்பால் அதிர்ச்சி நெட்டிசன்கள்..!

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனரின் மகன் சரவணன் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்க உள்ளது உறுதியாகியுள்ளது.

அண்ணாச்சி என அழைக்கப்படும் சரவணா ஸ்டோர் நிறுவனரின் மகன் சரவணன் கடந்த சில வருடங்களாக சரவணா ஸ்டோர்ஸ் தொடர்பான விளம்பரங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். அப்போது அவர் நயன்தாராவுடன் ஜோடி போட்டு நடிப்பேன் என அவர் பேட்டி அளித்ததாக கூறப்பட்டது. ஆனால், அந்த தகவலை அவர் மறுத்திருந்தார்.

இந்நிலையில், அவரை வைத்து விளம்பர படங்களை இயக்கி வரும் இயக்குனர்கள் ஜேடி-ஜெர்ரி இரட்டையர் அண்ணாச்சியை சினிமாவில் நடிக்க சம்மதிக்க வைத்துவிட்டனர். அப்படத்திற்கு ‘லெஜண்ட் நம்பர் ஒன்’ என பெயர் வைக்க திட்டமிட்டுள்ளனராம்.

மேலும், வழக்கமான ஹீரோவின் சினிமாவாக இல்லாமல், சமுதாயத்திற்கு ஏதேனும் கருத்து சொல்வது போல் இருக்க வேண்டும் என அண்ணாச்சி கண்டிஷன் போட்டுள்ளாராம். எனவே, அதற்கான வேலைகளில் ஜேடி-ஜெர்ரி இறங்கியுள்ளனர். ரூ.30 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க முன்னணி ஹீரோயின்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.