சுத்தியல் படாக், நேசமணி லொடாக்.. நேசமணியை கொலை செய்ய முயற்சித்த கிருஷ்ணமூர்த்தி தலைமறைவு..!

pray for nesamani நேற்றிலிருந்து இந்தியா ட்ரெண்டிங் இதுதான். ஒரு சின்ன விளையாட்டாய், அதாவது ஒரு க்ரூப்பில் ஒரு சுத்தியலின் படத்தை பதிவிட்டு உங்கள் ஊரில் இதன் பெயர் என்ன என கேட்கப்பட்டிருந்தது.

அதற்கு ஒருவர் இதற்கு பெயர் சுத்தியல். இதை எதன்மீதாவது அடித்தால் ‘டங்க் டங்க்’ என சத்தம் வரும். பெயிண்டிங் காண்ட்ராக்டர் நேசமணி ஜமீன் மாளிகையில் வேலைபார்த்துக்கொண்டிருக்கும்போது அவரது மருமகன், அவர் தலையில் போட்டுவிட்டார்.

இதனால் அவரது தலை உடைந்துவிட்டது. பாவம் என பதிவிட்டிருந்தார். இங்குதான் தொடங்கியது, அதன்பிறகு தமிழ்நாடு ட்ரெண்டிங், இந்தியா ட்ரெண்டிங் என உலகம் முழுவதும் சென்றுவிட்டது. இது தொடர்பாக வந்த மீம்ஸ்களில் சில.