நீதிமன்றத்தில் மாஸாக வாதாடும் அஜித்..! நேர்கொண்ட பார்வை மாஸ் ட்ரெய்லர் வீடியோ..!

விஸ்வாசம் என்னும் மாபெரும் வெற்றிப்படத்திற்கு அடுத்தப்படியாக தல 59-வது படமாக ஸ்ரீதேவியின் கணவர் போனிக்கபூர் தயாரிக்க்யும் நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு இந்த வருடம் தொடங்கியது.

இப்படம், ஆரம்பத்தில் இருந்து படப்பிடிப்பு ஹைதராபாத்திலேயே நடந்து வருகிறது.

படத்தின் ஃபஸ்ட் லுக் பெயர் வந்தது, அதையடுத்து எந்த ஒரு அப்டேட்டும் வரவில்லை. இதனால் ரசிகர்கள் அப்டேட் வேண்டும் என ட்விட்டரில் தொடர்ந்து கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் படத்தின் டிரைலர் குறித்து ஒரு மாஸ் அப்டேட்டினை வெளியிட்டார். அதாவது படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணியளவில் வெளியாகிறது என்று. அதன்படி தற்போது, அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இவ்வளவு நாட்கள் ரசிகர்கள், காத்திருந்ததற்கு ஏதுவாக, மாஸான ட்ரெய்லர் வீடியோவை வெளியிட்டுள்ளது நேர்கொண்டப் பார்வை படக்குழு..