உலகிலேயே அதிக முறை திருமணம் செய்து கொண்ட பெண் இவர் தான்… எத்தனை தடவை தெரியுமா?

அமெரிக்காவை சேர்ந்த லிண்டா உல்ப் (68) என்ற பெண் தான் உலகிலேயே அதிக முறை திருமணம் செய்து கொண்டவர் ஆவார்.

லிண்டா உல்புக்கு முதல் திருமணம் 16 வயதில் நடந்தது. இதுவரை மொத்தம் 23 தடவை அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

திருமணமான சில ஆண்டுகளில் அல்லது சில மாதங்களில், வாரங்களில் கூட கணவரை லிண்டா விவாகரத்து செய்துள்ளார்.

கடைசியாக கிளையன் உல்ப் என்பவரை லிண்டா திருமணம் செய்து கொண்டார்.
கிளையன் தான் உலகிலேயே அதிகமுறை திருமணம் செய்து கொண்ட ஆண் ஆவார். அவருக்கு 29 முறை திருமணம் நடந்துள்ளது.

இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் ஜாக் கவுர்லி என்பவரை 3 முறை லிண்டா திருமணம் செய்து கொண்டது தான்.

எனக்கு பலரை திருமணம் செய்து கொண்டதில் வருத்தமில்லை, அதை பெருமையாகவே கருதுகிறேன் என லிண்டா கூறுகிறார்.