பிக்பாஸில் மதுமிதா காப்பாற்றப்பட்டார்… வனிதா வெளியேறுவது உறுதி: இணையத்தில் கசிந்த வீடியோ

பிக்பாஸில் நிகழ்ச்சியில் இன்று வெளியேறப்போவது யார் என்பது உறுதியாக தெரிந்துவிடும், அப்படி இருக்கையில் நேற்றே நமக்கு வனிதா தான் இந்த வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் என்ற தகவல் கிடைத்துவிட்டது.

இதையடுத்து நேற்று மோகன் வைத்தியா காப்பாற்றப்பட்டார், இதனால் அடுத்தபடியா யார் கப்பாற்றப்படுவார் என்ற கேள்வி மக்களிடையே எழுந்து வந்த நிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.

அதில் மதுமிதா காப்பாற்றப்படுகிறார் என்று கமல் சொன்னவுடனே சாண்டி, அவர் இதற்கு முந்தைய வாரம் காப்பாற்றப்பட்டார் என்றவுடன் எப்படி அழுது கொண்டே ரியாக்‌ஷன் செய்தாரோ, அதே போன்று செய்து காட்ட, அரங்கத்தில் சிரிப்பலை பறந்தது.

இதோ அந்த வீடியோ…