கோவில் திருவிழால கூட லோஸ்லியா தான் மாஸ்! ரசிகர்கள் செஞ்சு வைச்சிருக்குற வேலையை பாருங்க!

தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோவில் திருவிழாவில் பக்தர்களை வரவேற்கும் விதத்தில் லோஸ்லியா ஆர்மி அட்டகாசமாக ஒட்டியுள்ள சுவரெட்டிகள் வைரலாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் பல போட்டியாளர்கள் இருந்தாலும் லோஸ்லியாவுக்கு தான் அதிக ரசிகர்கள் உள்ளனர்.
அவருக்கு சமூகவலைதளத்தில் பலர் லோஸ்லியா ஆர்மியை தொடங்கியுள்ளனர்.

இந்த சூழலில் தமிழகத்தின் திருநேல்வேலியில் உள்ள லோஸ்லியா ரசிகர்கள் ஆனித்தேரோட்ட திருவிழாவையொட்டி பல இடங்களில் லோஸ்லியா புகைப்படங்களுடன் சுவரொட்டியை ஒட்டியுள்ளனர்.

அதில், பெண்ணே உன்னை பார்த்த போதும் வேறு ஏதும் வேணாமே என எழுதப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ள நிலையில் லோஸ்லியாவுக்கு இந்தளவுக்கு வெறித்தனமான ரசிகர்களா என பலரும் வியந்து வருகிறார்கள்.