லாஸ்லியாவை கிண்டல் செய்து நடிகை கஸ்தூரி செய்த வேலை.. செம கோபத்தில் ரசிகர்கள்

பிக்பாஸ் வீட்டில் எப்போதும் அமைதியான பெண்ணாக இருப்பவர் லாஸ்லியா, எந்த பிரச்சனைக்கும் செல்லாமல் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவர்.

இதன் காரணமாகவே நேற்று கமல், லாஸ்லியாவிடம் வீட்டில் ஏதேனும் பிரச்சனை என்றால், கொஞ்சம் வாய் திறங்கள், அப்போது தான் உங்களைப் பற்றி தெரியும், ஏற்கனவே உங்களின் பேச்சுக்கு கை தட்டல் பறக்கிறது என்று கூறினார்.

இதையடுத்து லாஸ்லியால், தர்சன்-வனிதா சண்டை, அதன் பின் மைனா கதை போன்றவை சொல்லி ரசிகர்களை கண்கலங்க வைத்தார்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், சும்மா இருந்த லாஸ்லியாவை கமல் பேச வைத்து நல்ல கண்டண்ட் கொடுத்துவிட்டார் என்று கிண்டல் செய்யும் விதமாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதைக் கண்ட லாஸ்லியா ரசிகர்கள் கஸ்தூரியை வறுத்தெடுத்து வருகின்றனர்.