உலக லெவல் ரீச்… அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்த அயல்நாட்டு பெண் – வீடியோவை பாருங்க.!

அஜித் பாடலை அசால்டாக பாடும் அயல்நாட்டு பெண்ணின் வீடியோ ஒன்று இணையத்தில் காட்டு தீ போல வைரலாகி வருகிறது.

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் விஸ்வாசம். அப்பா, மகள் செண்டிமெண்ட், பக்கா கிராமத்து கதை என்பதால் படு மாஸான வரவேற்பை பெற்று பல்வேறு சாதனைகளை படைத்தது.

இந்த படத்தில் இடம் பெற்றிருந்த கண்ணான கண்ணே பாடல் பலரின் பேவரைட் பாடலானது மட்டுமில்லாமல் பலரின் காலர் ட்யூனாகவும் இருந்து வருகிறது.

இவைகளை தொடர்ந்து தற்போது அயல்நாட்டு பெண்மணி ஒருவர் கண்ணான கண்ணே பாடலை மிக அழகாக பாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி படு வைரலாகி வருகிறது.