பிக்பாஸ் சாண்டியின் மனைவி எப்படிப்பட்டவர்? ஓப்பனாக பேசிய முன்னாள் மனைவி காஜல்பசுபதி

பிக்பாஸ் வீட்டில் இப்போது இருக்கும் போட்டியாளர்களிலே கலகலப்பாக இருப்பவர் யார் என்றால் அது சாண்டி மாஸ்டர் தான், அவர் தான் வீட்டில் எவ்வளவு பிரச்சனை வந்தாலும், அவ்வப்போது ஏதேனும் காமெடி செய்து அதை அப்படியே மறக்கடித்துவிடுகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அவரின் பிறந்தநாளின் போது, பிக்பாஸ் சர்பிரைசாக அவரின் மகளின் வீடியோவை போட்டுக் காண்பித்து, ஒட்டு மொத்த பிக்பாஸ் குடும்பத்தையும் கண்கலங்க வைத்தார்.

இதற்கிடையில் சாண்டியைப் பற்றி அவருடைய முன்னாள் மனைவி காஜல் தொடர்ந்து, பேட்டி கொடுத்து வருகிறார்.

இப்படி இவர் தொடர்ந்து பேட்டி கொடுத்துக் கொண்டே இருக்கிறார். இதனால் அவரின் இரண்டாவது மனைவி வருத்தப்படமாட்டாரா என்று காஜல்பசுபதியிடமே சமீபத்திய பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட போது, சாண்டியைப் பற்றி நான் பேசுவது அவரது மனைவிக்கு வருத்தத்தை ஏற்படுத்தலாம்.

உண்மையிலே சாண்டியின் மனைவி நல்லவங்க, பாவம், பொதுவாக பிரேக் அப் ஆனவர்கள் அவர்களுடைய முன்னால் காதலர் மற்றும் காதலியைப் பற்றி பேசமாட்டார்கள்.

ஆனால் நான் சாண்டியை தற்போது நண்பனாக பார்க்கிறேன், வேறு ஒன்றுமே கிடையாது. அவன் பிக்பாஸ் டைட்டிலை வின் பண்ன வேண்டும் என்பதே ஆசை என்று கூறியுள்ளார்.