மனைவி மற்றும் குழந்தையை கொடூரமாக கொலை செய்த இளைஞர்..! விசாரணையில் வெளிவந்த பகீர் காரணம்

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமைப்பட்டியை அடுத்துள்ள மாணிக்கவேலூர் பகுதியை சார்ந்தவர் சுரேஷ் (வயது 25). இவரது மனைவியின் பெயர் கௌரி (வயது 22). சுரேஷ் லாரி ஓட்டுநராக பணியாற்றி வரும் நிலையில், இவர்கள் இருவருக்கும் ஒரு வயதுடைய புகழ்வின் என்ற ஆண் குழந்தையானது உள்ளது.

இவர்களுக்கு சொந்தமாக மாணிக்கவேலூரின் எல்லை பகுதியில் தோட்டம் ஒன்று இருக்கிறது. ஓட்டுநராகவும், தோட்டத்தில் விவசாயம் செய்தும் வந்த சுரேஷ், நேற்று தனது மனைவி மற்றும் மகனுடன் தோட்டத்திற்கு சென்ற சமயத்தில், திடீரென கௌரியின் பலத்த அலறல் சத்தம் கேட்டுள்ளது.

இந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்து தோட்டத்தை சார்ந்த நபர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்த சமயத்தில் மூவரும் கழுத்து அறுபட்ட நிலையில், இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி துடித்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே கௌரி மற்றும் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சுரேஷ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த தகவலானது காவல் துறையினருக்கு தெரியவரவே, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், மனைவி மற்றும் குழந்தையை கொலை செய்து சுரேஷ் தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது. இது குறித்த விசாரணையில், அதே பகுதியை சார்ந்த லாரி ஓட்டுநர் வீரகுமார் மற்றும் சுரேஷ் நண்பர்களாக இருந்து வந்த நிலையில், இருவரும் மது அருந்துவதற்கு ஒன்றாக செல்வது வழக்கம். இந்த சமயத்தில், எனது மனைவிக்கும் – வீரகுமாருக்கும் இடையே தவறான பழக்கம் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இதனையடுத்து எனது மனைவி மற்றும் குழந்தையை தோட்டத்திற்கு அழைத்து சென்று இது குறித்து அவரிடம் விசாரித்தேன். எனது நண்பரையும் மது அருந்த தோட்டத்திற்கு அழைத்த நிலையில், அவர் தோட்டத்திற்கு வர மறுத்துவிட்டார்.

இந்த சமயத்தில் தோட்டத்தில் நடந்த வாக்குவாதத்தை அடுத்து மனைவி – குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்து, நானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தேன். என்னை காப்பாற்றிவிட்டனர் என்று கூறியுள்ளார். இந்த சம்பவமானது பெரும் அதிர்ச்சியை அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.