வெளிநாட்டில் பணிபுரிந்த கணவர்! உள்ளூரில் வேறு நபரை மணந்து பல மோசடிகளை செய்த மனைவி.. திடுக்கிடும் பின்னணி

கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில் அவர் கையெழுத்தை மோசடி செய்து விவாகரத்து படிவம் தயார் செய்து வேறு நபரை திருமணம் செய்து கொண்ட பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவர் யூசுப் ஷெரீப் மஸ்தான். இவருக்கும் நிலோபர் (31) என்ற பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான்.

ஷெரீப் துபாயில் பணிபுரியும் நிலையில் அடிக்கடி மனைவிக்கு பணம் அனுப்பி வந்தார்.
இந்த பணத்தில் நிலோபர் இரண்டு சொந்த வீடுகளை வாங்கினார், கணவர் வெளிநாட்டில் இருந்த சூழலில் நிலோபருக்கு உள்ளூரில் வேறு நபருடன் தொடர்பு ஏற்பட்டது.

இந்நிலையில் 2017-ல் ஷெரீப் ஊருக்கு வந்தார். அப்போது அவரிடம் நிலோபர் பேசாத நிலையில் வீட்டுக்குள்ளும் கணவரை அனுமதிக்கவில்லை.

இதையடுத்து விடுதியில் தங்கியபடி மனைவி ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என ஷெரிப் விசாரித்தார்.

அப்போது தான் அவருக்கு அனைத்து உண்மைகளும் தெரிந்தது.
அதாவது, இரண்டு வீட்டில் ஒரு வீட்டை ரூ 32 லட்சத்துக்கு விற்று அந்த பணத்தை நிலோபர் வைத்திருந்தது தெரியவந்தது.

இதன் பின்னர் மீண்டும் துபாய்க்கு ஷெரீப் சென்ற நிலையில் இந்தாண்டு தொடக்கத்தில் ஊருக்கு வந்தார்.

அப்போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது, தனது மனைவி நிலோபர் வேறு நபரை திருமணம் செய்து கொண்டதும், விவாகரத்து பத்திரத்தில் தன்னை போன்றே போலியாக கையெழுத்து போட்டு மோசடி செய்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக ஷெரீப் பொலிசில் புகார் அளித்தார், இதையறிந்த நிலோபர் தலைமறைவாகியுள்ளார்.

அவர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து வேறு நீதிமன்றத்தில் அவர் மனு அளித்துள்ளார். இதன் விசாரணை அடுத்த மாதம் நடக்கிறது.

நிலோபர் மோசடி செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால் அவருக்கு இந்த வழக்கில் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.