அபிராமியை போட்டுக்கொடுத்த வனிதா.. மூக்கை உடைத்து அசிங்கப்படுத்திய கமலின் செம வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சி மூன்றாவது சீசன் சண்டை, சச்சரவுகள் என பார்வையாளர்களுக்கு சுவாரஷ்யங்கள் நிறைந்ததாகவும், வெற்றிகரமாகவும் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், முதல் வாரத்தில், எலிமனேஷன் இல்லை என்று கூறப்பட்டு, இரண்டாவது வாரத்தில், செய்தி வாசிப்பாளர் ஃபாத்தீமா பாபு வெளியேற்றப்பட்டார். அதே வாரத்தில், மக்களின் மிகுந்த பேராதரவுடன், அதிக வாக்குகள் பெற்று நகைச்சுவை நடிகை மதுமிதா காப்பாற்றப்பட்டார்.

இந்நிலையில், இந்த வாரம், மதுமிதா, வனிதா, மோகன் வைத்யா, மீரா, சரவணன் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று சனிக்கிழமை, இந்த வாரம் எலிமனேஷனில் இருந்து காப்பற்றப்படுவது யாராக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அதில், அபிராமி, கேரக்டர் இப்படித்தான், அவர் மீது அட்டேன்சன் வரவேண்டும் என்பதால் இப்படி செய்கிறார் என அபிராமியை கமலிடம் வனிதா போட்டு கொடுக்கிறார்.

அப்போது, கமல் மூக்கை உடைக்கும் விதமாக, நீங்கள் ஒருபுறமே கேட்டு பேசுகிறீர்கள், மறுபுறம் கேட்பதில்லை, வெறும் சத்தம் மட்டுமே வருகிறது என சட்டென்று பதிலளிக்கிறார்.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ