பிக்பாஸ் வீட்டில் தர்ஷன் காதலிப்பதாக கூறிய பெண் இவரா? வைரலாகும் புகைப்படம் இதோ

பிக்பாஸ் வீட்டில் தர்ஷன் தன்னிடம் வந்து நெருக்கமாக பேசுவதை அறிந்த மீரா அவன் தன்னை காதலிப்பதாக நினைத்தார்.

ஆனால் தர்ஷனோ, தனக்கு வெளியே காதலி இருப்பதாக கூறினார். அதாவது இது குறித்து ஷாக்சியிடம் மீரா கூறும் போது, அவர் இவன் என்னிடம் வந்து பேசுவதைக் கண்டு நான் காதலிப்பாதாக நினைத்தேன்.

ஆனால் அவனுக்கு வேறொரு பெண் மீது காதல் இருப்பது தெரியாது, அதன் பின் நான் அவனை என்னுடைய நண்பனாக ஏற்றுக் கொண்டேன் என்று கூறினார்.

இந்த பேச்சு நேற்று கமல் முன்னிலையிலும் நடந்தது.

இந்நிலையில் மீராவிடம் தர்ஷன் தான் காதலிப்பதாக கூறிய பெண் ஒரு மாடல் எனவும், அவரின் பெயர் ஷனம் ஷெட்டி என கூறப்படுகிறது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் ஷனம் செட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷனுடன்  இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் இன்னும் ஒரு சிலரோ இவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறி வருகின்றனர்.