பிக்பாஸ் வீட்டில் கமலிடம் லாஸ்லியா சொன்ன மைனா கதை… கண்கலங்கிய போட்டியாளர்கள்

பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களிடம் லாஸ்லியா ஏதோ ஒரு கதை சொல்லியிருக்கிறார்.

ஆனால் அந்த கதை எபிசோட் ஒளிபரபப்படாத காரணத்தினா, கமல் இன்று நீங்கள் ஏதோ மைனா கதை சிலரிடம் கூறியிருக்கிறீர்கள், அதை இப்போது கூற முடியுமா என்று கேட்டார்.

உடனே லாஸ்லியா சற்று உணர்ச்சி பொங்க, எங்கள் வீட்டிற்கு அருகில் இருப்பவர் வீட்டின் மரத்தில் மைனா வளர்ந்து கொண்டிருந்தது. அப்போது மைனா என்றால் எனக்கு இஷ்டம் என்பதால், அவரிடம் சென்று கேட்ட போது, மறுநாள் வந்து எடுத்து கொள்ளும் படி கூறினார்.

அதன் பின் மறுநாள் சென்ற போது, மைனாவின் குட்டி கிடைத்தது, முதலில் அது யார் கையில் இருக்கிறதோ, அவர்களிடமே பாசமா இருக்கும் என்று கூறியதா, என் அக்கா வாங்கிக் கொண்டாள்.

இதைத் தொடர்ந்து வீட்டில் அதை வளர்த்து வந்தோம், சுமார் 1 வருடத்தில் அதற்கு இறக்கை முளைத்தது. இதனால் பறந்துவிடும் என்று பயந்து இறக்கையை கட் செய்ய நினைத்த போது, அப்பா அது எல்லாம் வேண்டாம், பறந்தால் பறக்கட்டும் என்று கூறினார்.

ஆனால் அதுவோ எங்கும் செல்லாமல், என்னிடம் பாசமாக இருந்தது. குறிப்பாக நான் வெளியில் சென்றால் என்னுடன் வரும், அருகில் இருக்கும் மரங்களில் பறந்து பறந்து வரும், அதுமட்டுமின்றி வீட்டில் யாராவது அடிக்க வந்தால், அவர்களை கொத்தும்.

அப்படி இருந்த போது, நாங்கள் வீடு மாறி சென்றோம், ஆனால் அந்த மைனாவிற்கு புது வீடு பிடிக்காததால், பழைய இடத்திலே இருந்து வந்தது, நான் பள்ளி முடித்து வந்தால், அதற்கு உணவு வைப்பேன், இப்படி 6 வருடம் சென்ற போது, ஒரு நாள் திடீரென்று மைனாவை காணவில்லை.

நாங்கள் அது அதன் ஜோடி மைனாவுடன் சென்றிருக்கும் என்று நினைத்தோம், ஆனால் இரண்டு நாட்களுக்கு பின்னர், அந்த வீட்டின் அருகே மனநலம் சரியில்லாத சிறுவன் இருப்பான், அவனை மைனாவுக்கு பிடிக்காது என்பதால், அவனை கொத்திக் கொண்டே இருக்கும்.

அப்படி சம்பவ தினத்தன்று அவர்கள் குடும்பத்தினர் சாப்பிட்டு போட்ட உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அவன் இரும்பு கம்பியை மைனா மீது போட்டு கொன்றுவிட்டான் என்று கண்கலங்கிய படி முடித்தார்.