திரைப்பிரபலங்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்திய செய்தி..கண்ணீர் விடும் மக்கள்! புகைப்படங்கள் உள்ளே

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருக்கும் நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்த இந்த தேவாலயம் தற்போது பெரும் சேதத்தை சந்தித்திருப்பது பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

850 வருட பழமையான நோட்ரே டேம் கதீட்ரல் தேவாலயம் பல வரலாற்று நினைவுகளையும், கலையமைப்புகளையும் கொண்டிருந்தது.

 

இந்த சம்பவத்தால் நகரின் பல பகுதிகளிலும் புகைமண்டலம் ஏற்பட்டது. இதனை நேரில் பார்த்த பாரிஸ் நகர மக்களும் சுற்றுலா பயணிகளும், வார்த்தைகளால் இந்த துயரத்தை விவரிக்க முடியாமல் கண்கலங்கியபடியே அந்த இடத்தில் அமர்ந்திருந்தனர்.

அப்போது அங்கிருக்கும் ஒருவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், கண்முன்னே எங்களுடைய கலை மற்றும் வரலாறு அழிந்துவிட்டது. இடைக்காலத்தில் இருந்தே இந்த தேவாயலயம் இருந்து வந்தது. இது முற்றிலும் ஒரு மிகப்பெரிய பேரழிவு என்றும் நீங்கள் பிரார்த்தனை செய்வதாக இருந்தால், இப்போது பிரார்த்தனை செய்யுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்த இந்த தேவாலயம் தற்போது தீ விபத்தில் சிக்கியதால், திரைப்பிரபலங்கள் பலரும் தேவாலயத்தின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து சோகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

 

குறிப்பாக நடிகை தமன்னா, அனுபமா போன்றோர் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், மேலும் சில திரைப்பிரபலங்கள் தங்களுடைய டுவிட்டர் பக்கத்திலும் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.