நடிகை சுனைனாவிற்கு இந்த பழக்கம் இருக்கா..? புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

கடந்த 2005ம் ஆண்டு குமார் VS குமாரி என்கிற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சுனைனா.

தமிழில் 2008ஆம் ஆண்டு ‘காதலில் விழுந்தேன்’ படத்தில் நடிகர் நகுலுக்கு ஜோடியாக நடித்தார்.

முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததால், தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில், ‘தெறி’, ‘காளி’ போன்ற படங்கள் வெளியாகியது.

மேலும் தற்போது ‘நிலா நிலா ஓடி வா’ என்கிற வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். அதேபோல் ‘சில்லுக்கருப்பட்டி’, ‘எரியும் கண்ணாடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்பிடிப்பது போன்று புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்தை புகைப்படம் zee5 Originals வெப் சீரியஸுக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை தெளிவாக கூறியுள்ளார்.

இதைப்பார்த்த, இவரது ரசிகர்கள் அனைவரும் நல்ல விதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.