இந்த சமயத்தில் இவ்வளவு கவர்ச்சி தேவையா..? புகைப்படத்தைப் பார்த்து விளாசித் தள்ளும் நெட்டிசன்கள்..!

நடிகர் சமீரா ரெட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. அதன்பின் அவர் வெடி, வேட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். 2014ம் ஆண்டு ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு 4 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.

தற்போது மீண்டும் சமீரா ரெட்டி கர்ப்பமடைந்துள்ளார். ஆனாலும், தனது புகைப்படங்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் கணவர் மற்றும் மகனுடன் கோவா சுற்றுலாவுக்கு சென்றிருந்தார்.

அப்போது லேசான உடை அணிந்து சில புகைப்படங்களை அவர் வெளியிட்டிருந்தார். கர்ப்பிணி என்பதால் தளர்வான உடையை அவர் அணிந்திருந்தார். ஆனால், அதை கவர்ச்சியாக பார்க்கும் சில நெட்டிசன்கள் அதற்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.