நடிகர் விக்ரமின் மனைவியை யார் தெரியுமா? பலருக்கும் தெரியாத சில தகவல்கள் இதோ

தமிழ் சினிமாவில் தன்னுடைய திரைப்பயணத்தை சீரியலில் இருந்து ஆரம்பித்த நடிகர் விக்ரம் அதன் பின் 1990-ஆம் ஆண்டில் என் காதல் கண்மனி படம் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அவருக்கு மீரா திரைப்படம் நல்ல ஒரு வெற்றியை கொடுக்க அதைத் தொடர்ந்து மலையாளம் படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.

அதன் பின் தமிழில் அஜித் நடித்த உல்லாசம், பாலாவின் இயக்கத்தில் உருவான சேது படம் தான் இவருடைய கேரியரையே மாற்றிய படம், அப்படி திரையுலகில் பிதாமகன், சாமி, அந்நியன் என பல வெற்றிப் படங்களை கொடுத்து தற்போது கடாரம் கொண்டான் என்ற படத்தில் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

இவரின் மகன் துருவ் கூட தற்போது அர்ஜுன் ரெட்டி தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

இப்படி சினிமாவில் கலக்கி வரும் விக்ரமிற்கு1992-ஆம் ஆண்டிலே திருமணம் முடிந்தது. இவர் 1980-ல் ஷைலா பாலாகிருஷ்ணா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஷைலஜா கேரளாவில் இருக்கும் பள்ளி ஒன்றில் உளவியல் ஆசியராக இருந்து வந்துள்ளார். அதன் பின் அவர் விக்ரம் நடிப்பில் உருவான தெய்வ திருமகள் படத்தில் விக்ரம் மன நலம் குன்றியவராக நடித்திருந்ததால், அவருக்கு இவர் தான் அதைப் பற்றி சொல்லிக் கொடுத்தார்.

அதுமட்டுமின்றி விக்ரம் சில முடிவுகள் எடுப்பதற்கு இவர் எப்போதும் உறுதுணையாக இருந்து வருகிறார். தற்போது குடும்ப பொறுப்புகளை கவனித்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு அக்‌ஷிதா என்ற மகளும், துருவ் என்ற மகனும் உள்ளனர். இதில் அக்‌ஷிதாவுக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு தான் திருமணமானது.