டெல்லி நிர்பயா வல்லுறவு வழக்கில் குற்றவாளிகளுக்கு நேற்று காலையில் திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட பிறகு, அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நால்வரின் உடல்களும் திகார் சிறையில் இருந்து டெல்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை செய்ய எடுத்து செல்லப்பட்டது.

முன்னதாக, இன்று (மார்ச் 20) காலை 5.30 மணிக்கு திகார் சிறையில் இவர்கள் நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்தது. நிர்பயா வழக்கில் குற்றவாளிகள், அக்ஷய் குமார், வினய் ஷர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய நான்கு பேருக்கும் உச்ச நீதிமன்றம் சில மாதங்களுக்கு முன்பு தூக்கு தண்டனையை உறுதி செய்தது.

இந்த நால்வரும் சட்டத்தில் உள்ள ஓட்டைகளில் புகுந்து வெளியே செல்ல பலமுறை முயன்றும் எந்த பயனும் இல்லை. அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டன. இதனால், இவர்களுக்கு தூக்கு தண்டனை உறுதியானது.

இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை நாடு முழுக்க கொண்டாடும் தருணம் இருந்தும் தற்போது அதற்கான சூழ்நிலை இல்லை என்பதால் கொண்டாட்டங்களை பார்க்க முடியவில்லை.

தூக்குதண்டனையை வரவேற்கும் அனைவரும் கூறும் ஒரு கருத்து என்னவென்றால் ” வெறும் 30 கோடி மக்களுக்காக, அப்போது நடை பெற்ற குற்றங்களை மட்டுமே மனதில் வைத்து உருவாக்கப்பட்ட சட்டமே 130 கோடி மக்கள் ஆகி விட்டநிலையிலும், குற்றங்கள் அதிகரித்து விட்ட நிலையிலும் நடைமுறையில் இருப்பது வேதனை. செல்லரித்து போன இந்த சட்டங்களை தூக்கி எரிந்து விட்டு புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் ” என்பது தான்.

இதற்க்கான நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ளும் என நம்புவோம். இந்நிலையில், நடிகை கஸ்தூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ” நிர்பயா வழக்கில் 4 மிருகங்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒருவன் மட்டும் சட்டத்தின் ஓட்டை வழியாக தப்பித்துவிட்டான். அவன் பஸ்ஸில் மாட்டி அல்லது கொரோனா வைரஸ் தாக்கி சாகணும்”.

முன்னதாக வல்லுறவில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் ஒருவனை அவனுடைய வயதை காரணம் காட்டி நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த சிறுவனை மனதில் வைத்து தான் நடிகை கஸ்தூரி பஸ்ஸில் சிக்கியோ, கொரோனா தாக்கியோ சாக வேண்டும் என்று கூறியுள்ளார் கஸ்தூரி.