பிரபல நடிகை நிரோஷா அக்னி நட்சத்திரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதை தொடர்ந்து தெலுங்கு,கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார். இவருக்கும் நடிகர் ராம்கிக்கும், திருமணம் நடைபெற்ற பின் சினிமாவை விட்டு சற்று விலகி இருந்தார்.பின்பு மீண்டும் தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் மீண்டும் வந்துள்ளார்.

தற்போது மேலும் சில படங்களில் சிறிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி அளித்தார். அதில் பல்வேறு சுவாரஸ்யமான கேள்விகளுக்குப் அவர் பதிலளித்துள்ளார். அப்போது இப்போதிருக்கும் நடிகர்களில் யாருடன் நடிக்க விருப்பம் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது அஜித் தான். அவருடைய எல்லா கதாபாத்திரங்களும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

மேலும் அவர் எப்படி இருந்தாலும் நல்லா இருப்பார். அதுதான் அவரிடம் இருக்கும் பிரச்சினையே. தல படங்கள் எப்போது வந்தாலும் முதல்நாள் முதல் காட்சியை பார்த்து விடுவேன். அவருடன் நடிக்க வேண்டும் என்பது தான் எனது நீண்ட நாள் கனவு என்று அவர் கூறியுள்ளார்.