தமிழ் திரையுலகில் டாப் ஹீரோக்களாக மக்கள் மனதில் கடந்த பல ஆண்டுகளாக திகழ்ந்து வருபவர்கள் என பார்த்தால் ரஜினி, கமல், அஜித், விஜய், உள்ளிட்ட பல நடிகர்களை கூறலாம்.

நடிகர் கமல் ஹாசன் தற்போது நடிப்பில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி அரசியல் பக்கம் தனது கவனத்தை கொண்டு செல்கிறார்.

தற்போது நாடு முழுவதும் மிக பெரிய அச்சத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருப்பது கொரானா வைரஸ்.

இது குறித்து அந்தெந்த நாடுகள் பல விதமான விழிப்புணர்வுகளை தங்களது மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இதை போன்ற கொடிய நோய்கள் 100 ஆண்டிற்கு ஒரு முறை வரும் என்று சில தகவல்கள் தெரியவந்துள்ளது.

இதனை குறித்து நமது இந்திய பிரதமர் நேற்று மாலை அறிக்கை ஒன்றை வீடியோ மூலமாக வெளியீட்டு இருந்தார். இதில் குறிப்பாக ஒரு விஷயத்தை கூறியிருந்தார்.

ஆம் வரும் ஞாற்று கிழமை அன்று, அதாவது 22ஆம் தேதி அன்று மட்டும் காலை 7 மணியில் இருந்து மாலை இரவு 9 மணி வரை யாரும் தனது வீட்டில் இருந்து வெளிவர வேண்டாம் என்று உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் இதனை குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான திரு.கமல் ஹாசன் டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதில் “நான் பிரதமர் மோடியின் உத்தரவிற்கு துணை நிற்கிறேன். இதனால் நாம் ஒற்றுமையை தெரிவிப்போம்” இத்துடன் நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்களை டேக் செய்து இதற்கு உறுதுணையாக நிற்குமாறு அழைத்துள்ளார் கமல்.