‘பொறியாளன்’, ‘காக்கா முட்டை’, ‘விசாரணை’, ‘கொடி’, ‘அண்ணனுக்கு ஜே’, ‘மிக மிக அவசரம்’ போன்ற படங்களுக்கு பிறகு இயக்குநர் வெற்றிமாறன் திரில்லர் கதையம்சம் கொண்ட புதிய படமொன்றை தயாரிக்கவுள்ளார். இந்த படத்தை புதுமுக இயக்குநர் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கவுள்ளார். நாஞ்சில் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கா-தி பாரஸ்ட்’ என்ற திரில்லர் படத்திலும் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் ‘மாஸ்டர்’, ‘அரண்மனை 3’ போன்ற எதிர்பார்ப்புள்ள படங்களிலும் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் 2018-ம் ஆண்டு வெளியான ‘வட சென்னை’ படத்தில் ஆண்ட்ரியா நாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தும் முக்கிய கதாபாத்திரமாக அது அமைந்தது. ‘வட சென்னை 2’ படத்திலும் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரமே முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வெற்றிமாறன் தயாரிக்கும் புதிய படத்திலும் ஆண்ட்ரியா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்கவுள்ளது.