மாடலிங் துறையை சேர்ந்த மாளவிகா மோகனன், 2013 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம் ‘பட்டம் போலே’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்தவர், ரஜினியின் ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன், ‘மாஸ்டர்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.

இந்த நிலையில், மாளவிகா மோகனன் இளம் இயக்குநர் ஒருவருடன் காதல் வயப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்று படங்கள் இயக்கியிருக்கும் அந்த கோலிவுட் இளம் இயக்குநர் தனது ஒவ்வொரு படத்திலும் பல படிகள் முன்னேறி, இன்று தமிழ் சினிமாவின் உச்ச நடிகரை வைத்து தனது மூன்றாவது படத்தை இயக்கிவிட்டார். விரைவில் வெளியாக உள்ள அப்படத்தின் வியாபாரம் மிகப்பெரிய அளவில் நடந்திருப்பதால், இயக்குநருக்கு தொடர்ந்து பெரிய நடிகர்களின் படங்கள் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, நடிகை மாளவிகா மோகனனுடன் இயக்குநர் காதல் வயப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அப்படி எல்லாம் இருக்காது, மாளவிகா மோகனன் நடிகையாக பெருஷாக எதையும் சாதித்துவிடவில்லை, விஜயின் ‘மாஸ்டர்’ படத்திற்குப் பிறகு தான் அவரது ரவுண்ட் எப்படி இருக்கும், என்று கூற முடியும், என்பதால் அவர் இதற்குள் காதல், கத்திரிக்காய் எல்லாம் விரும்ப மாட்டார், என்று சில நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தாலும், அந்த கருத்துக்கு பதிலாக, சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாளவிகா மோகனின் அருகே அமர்ந்துக் கொண்டு இயக்குநர் சிரித்து சிரித்து பேசிய புகைப்படங்களை வெளியிடுகிறார்கள்.

பொருத்திருந்து பார்ப்போம், இது வதந்தியா அல்லது மற்றவர்களை வாயடைத்து போக வைக்கும் காதல் செய்தியா என்று.