நடிகையுடன் மகன் நெருக்கமாக இருக்கும் போட்டோ வெளியான நிலையில் அப்பாடி நடிகர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

தம்பி ராமையா இயக்குநரும் நடிகரும் ஆவார். மனு நீதி, இந்திரலோகத்தில் நான் அழகப்பன், மணியார் குடும்பம் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார்.

ஏரளாமான படங்களிலும் நடித்திருக்கிறார் தம்பி ராமையா. மைனா படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

அந்தப் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் தம்பி ராமையா. மேலும் அந்த படத்திற்காக தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கனா விருதையும் பெற்றார். கழுகு, சாட்டை, கும்கி, கதை திரைக்கதை வசனம் இயக்கம், அடுத்த சாட்டை ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும் சிறந்த வில்லனாகவும், குணச்சித்திர நடிகராவும் திகழ்ந்து வருகிறார். இவரது மகன் உமாபதி ராமையா. இவர், சேரன் இயக்கத்தில் வெளியான திருமணம் படத்தில் நடிகை சுகன்யாவுக்கு தம்பியாக லீடிங் ரோலில் நடித்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் உமாபதி.

இந்நிலையில் உமாபதி, நடிகை யாஷிகா ஆனந்துடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் அண்மையில் வெளியானது. இருவரும் ஹோட்டலில் ஒன்றாக சாப்பிடும் போட்டோக்கள், போட்டிங் செல்வது போன்ற போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இதனை பார்த்த நெட்டிசன்கள், இருவரும் காதலிக்கிறார்களா? இருவரும் டேட்டிங் சென்ற போட்டோக்களை இவை என கேள்வி எழுப்பினர். இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகர் தம்பி ராமையா, தான் இயக்கும் சிறுத்தை சிவா என்ற படத்தின் இறுதிக்கட்ட பணியில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அந்தப் படத்தில் யாஷிகா ஆனந்துதான் ஹீரோயின். அந்த படத்தில் பாடல் காட்சி ஒன்றுக்கு எடுக்கப்பட்ட காட்சிகள் அவை. அந்தே போட்டோக்கைளை பரப்பி காதல் என கிளப்பி விடுகிறார்கள். அந்த தகவலில் உண்மையில்லை. உமாபதிக்கு நாங்கள் பெண் பார்த்துதான் திருமணம் செய்து வைப்போம். அவருக்கு மலேசியாவில் பெண் பார்த்து வருகிறோம்.

இதுபோன்ற தகவல்களையெல்லாம் நம்ப வேண்டாம். உமாபதி சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டி உள்ளது இவ்வாறு நடிகர் தம்பி ராமையா கூறியுள்ளார். ஆனால் சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் போட்டோக்கள் குறித்து யாஷிகாவோ உமாபதியோ இதுவரை வாய் திறக்கவில்லை. இதனிடையே படத்தின் விளம்பரத்திற்காக இப்படி கிளப்பி விடுகிறார்களோ என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.