தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக படத்தின் படபிடிப்பை எடுத்து வருகிறார்கள் படக்குழு.

சினிமா பிரபலங்கள் பலரும் தல அஜித்துடன் நடிக்க ஆசைப்படுவார்கள். இப்படி இருக்க தல அஜித்துடன் அதிக படங்களில் இணைந்து நடித்தவர் நடிகர் விவேக். நடிகர் விவேக் இவரின் காமெடிக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பு கிடைப்பது நமக்கு தெரியும். அப்படி இருக்க முன்னனி நடிகர்களின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

நடிகர் விவேக் கடைசியாக தல அஜித்தின் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் அடித்த படமான விஸ்வாசம் படத்திலும் நடித்திருப்பார். இப்படத்திலும் இவரின் நடிப்பு அசத்தலாக தான் இருக்கும். இ ந் நிலையில் இவரின் நடிப்பில் வெளிவந்துள்ள படம் தாராள பிரபு.இப்படத்தின் புரொமோசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார் நடிகர் விவேக். விவேக் எந்த மேடையில் இருந்தாலும் சுவாரஸ்யமாக மற்றும் நகைச்சுவையாகவும் பேசக்கூடியவர். தற்போது இந்த நிகழ்ச்சியில் நடிகர் விவேக்கிடம் நீங்கள் ஒரு பிரபலத்திற்கு சவால் விட வேண்டும் என்றால் யாருக்கு விடுவீர்கள் என்று கேட்கப்பட்டது. இதற்கு இவர்… நான் சவால் விட்டால் தல அஜித்திற்கு சவால் விடுவேன்.

தல அஜித் அவருடய ரசிகர்களிடம் நிறைய மரம் நடச் சொல்ல வேண்டும் என்று சவால் விட்டார்.