தமிழ் சினிமாவின் பல்வேறு முக்கிய நடிகர்கள் உள்ளனர் குறிப்பாக நடிகர்கள் விஜய் அஜித் ரஜினி கமல் ஆகியோர் முக்கியமான இடங்களை பெற்றுள்ளனர். இவர்களுக்கு அதிக ரசிகர்களும் தமிழகத்தில் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களிலும் உள்ளனர். ஒரு திரைப்படத்தின் வசூல் அடிப்படையில் அடுத்த திரைப்படத்திற்கு சம்பளம் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் அதை பற்றி இந்த பதிவில் காணலாம் ..

5.சூரியா :

நடிகர் சூர்யாவை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் ஓரளவுக்கு பிரபலமான நடிகராக உள்ளார். இவர் தற்போது 30 கோடி வரை ஊதியம் பெறுகிறார். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகியிருந்த காப்பான் மற்றும் என்ஜிகே ஆகிய திரைப்படங்கள் 90 கோடி வரை வசூல் செய்திருந்தது.

4.கமல் :

நடிகர் கமலஹாசனை பொறுத்தவரை தமிழ் சினிமாவில் அதிக திரைப்படங்களில் நடித்த நடிகராக உள்ளார். இருப்பினும் இவருக்கு 45 முதல் 50 கோடி வரை மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. கமலஹாசன் நடித்து வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியுற்று வருவதால் அவர் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை மட்டுமே நம்பி உள்ளார். இருப்பினும் நடிகர் கமலஹாசனுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் அதிக சம்பளம் கிடைக்கிறது.

3.அஜித் :

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித், தற்போது ரூபாய் 55 கோடி ஊதியமாகப் பெறுகிறார். அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் வலிமை திரைப்படம் வெற்றி பெற்றால் இவரது ஊதியம் 70 கோடியை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2.விஜய் :

தமிழ் சினிமாவின் தளபதி நடிகர் விஜய் தனது 64வது திரைப்படமான மாஸ்டர் திரைப்படத்திற்கு 80 கோடி ஊதியம் பெற்றுள்ளார். அதற்கு முன் வெளியான பிகில் திரைப்படத்திற்கு 50 கோடி ஊதியம் பெற்றுள்ளார். மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை பொறுத்து நடிகர் விஜய்யின் சம்பளம் மேலும் உயரும் என எதிர்பார்க்கலாம்.

1.ரஜினி :

தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இருப்பினும் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான தர்பார் திரைப்படம் 200 கோடி அளவுக்கு வசூல் மட்டுமே வசூல் செய்தது. இத்திரைப்படத்தை தயாரித்த நிறுவனத்திற்கு 65 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இருப்பினும் நடிகர் ரஜினிகாந்திற்கு 100 கோடி வரை இத்திரைப்படத்திற்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது தயாராகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் 120 கோடி வரை சம்பளம் வாங்குவார் என பேசப்படுகிறது