காதலனுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்க் ஷாக் கொடுத்த ரைசா வில்சன்… இதுல ஹேஷ்டேக் வேற

காதலர் தினமான நேற்று தனது காதலன் யார் என்று அறிமுகப்படுத்துவேன் என்று நேற்று ட்டிவிட்டரில் கூறியிருந்தார் நடிகை ரைசா வில்சன். இதற்கு ஓவியா, ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்டோர் வாழ்த்துகள் தெரவித்து வந்தனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் எல்லோருக்கும் தெரிந்தவர் ரைசா வில்சன். இவர் கடந்த ஆண்டு வெளியான ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுடன் இணைத்து நடித்தார்.

இந்த நிலையில், அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது அவரது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறார். அந்த வகையில் இவர் யாரை காதலிக்காரர் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியிலும் இருந்தது.

Loading...

இதை தொடர்ந்து, காதலர் தினமான இன்று தான் யாரை காதலிக்கிறேன் என்ற விவரத்தை வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது

Loading...