பிரபல சீரியல் நடிகை தற்கொலைக்கு காரணம் இது தான்… அதிர்ச்சியில் பெற்றோர் மற்றும் ரசிகர்கள்

தொலைக்காட்சி தொடர்கள் தான் வீட்டில் உள்ள பெண்களுக்கு பொழுதுபோக்கு என்று சொல்லலாம். அந்த அளவிற்கு பெண்களை கவரும் வகையில் தொலைக்காட்சி தொடர்கள் எடுக்கப்படுகிறது.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் நடிகை சுபர்ணா ஜாஸ். பெங்காலி மொழியில் பல்வேறு தொடர்களில் தனது நடிப்பினை வெளிப்படுத்தி வந்த சுபர்ணா ஜாஸ் சமீபத்தில் வெளிவந்த மயுற்பங்கி எனும் வங்க மொழி படத்தில் நடித்துள்ளார்.

Image result for சுபர்ணா ஜாஸ்

அதுவே அவர் இறுதியாக நடித்த படம் ஆகும். அடுத்து வேறு எந்த வாய்ப்பும் கிடைக்காத நிலையில் மன வருத்தத்தில் இருந்து வந்த சுபர்ணா ஜாஸ் விரக்தி அடைந்து தனது அறையில் மின் விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

Loading...

சுபர்ணா ஜாஸின் உடலை கைப்பற்றிய பெற்றோர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் சுபர்ணா ஜாஸினை பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர்.

இளம் நடிகையான சுபர்ணா ஜாஸின் மரணம் பெங்காலி திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Loading...