கதிரை கட்டிக்கொண்டு பைக்கில் போகும் முல்லை… இத தான நாங்க எதிர்ப்பார்த்தோம்.! ரசிகர்கள் குஷி தான் போங்க

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எபிசோடுக்கு எபிசோட் கதை நகர்ந்தாலும், முல்லை கதிரின் ரொமான்ஸுக்கும் குறை ஒன்றும் இல்லை.

கற்பனை பஞ்சம் இல்லாமல் சின்ன சின்ன அன்றாட சம்பவங்களில் கூட ரொமான்ஸ் கிளுகிளுப்பு ரசிகர்களுக்கு அள்ளுது போங்க! முல்லைக்கு பேஸ் வாய்ஸ் கொடுத்து இருக்கும் டப்பிங் ஆர்டிஸ்ட் கதாபாத்திரத்துக்கு கூடுதல் பிளஸ்.  சில காதலர்கள்

முல்லை கொடுக்கும் எக்ஸ்பிரஷன்ஸ் பெண்களையும் ரசிக்க வைக்குது. சிலர் நாமும் ஏன் இப்படி புருஷனிடம் பொறுமையா பேசி ரொமான்ஸ் பண்ணைக் கூடாது என்று கூட நினைக்கிறார்களாம். ஒரே சீரியலில் உலகத்த தமிழர்கள் மத்தியில் ஓஹோ என்று புகழ்பெற்று உள்ளது முல்லை கதிர் ஜோடி.

தினம் தினம்தான் இவர்கள் ரொமான்ஸ் செய்கிறார்கள். என்றாலும் ஒவ்வொன்றும் தனி ரகமாக இருக்கிறதாம். ஊர் உலகத்தில் பார்த்த காட்சிகள்தான் என்றாலும், பாண்டியன் ஸ்டோர்ஸில் பார்க்கும்போது ஸ்பெஷலாக இருக்கிறதாம்.

Loading...

என்னங்க.. ரொம்ப நல்லாருக்குங்க என்று முல்லை சொல்ல, அண்ணன் அப்பப்போ சர்வீஸுக்கு விட்டு ரொம்ப நல்லா மெயின்டெயின் செய்துகிட்டு வர்றார்னு ஒன்னும் புரியாமல் கதிர் சொல்றான்.  ஸ்பீட் பிரேக்

இல்லைங்க பைக்கை சொல்லலை…இப்படி பைக்கில் உங்க கூட வர்றது நல்லா இருக்குங்க என்று பொறுமை குறையாமல் சொல்றா முல்லை. கதிர் குஷியாகி அதை வெளியில் காண்பித்துக்கொள்ளாமல் பைக் கண்ணாடியில் முல்லை முகத்தை பார்த்து ரசிக்கிறான்.

இதை பார்க்கும் காதலர்களுக்கு தங்களது பைக் ரைடிங் அனுபவங்கள் நெஞ்சில் இனிக்க இனிக்க நினைவுக்கு வந்து இன்பமாக அசைபோட வைக்கும். சில காதலர்கள் பைக்கின் ரெண்டு கண்ணாடிகளை கூட காதலி முகத்தைப் பார்க்க திருப்பி வைத்துக்கொண்டது நினைவுக்கு வரும். ஒரு புறம் பார்த்துக்கொண்டு இருந்த காதலி இன்னொரு புறம் பார்க்கும்போது இவன் அவள் முகத்தைப் பார்க்காமல் மிஸ் பண்ணிவிடக் கூடாது பாருங்கள்… அதற்காக!

இருவரும் ஒருவித இனம் புரியாத உணர்வில் வண்டியில் பயணித்துக்கொண்டு இருக்க, திடீர்னு ஸ்பீட் பிரேக்.. பாவம் கதிர் எதிர்பார்க்காததுதான். முல்லையும் எதிர்பார்க்கவில்லை என்பதால் ஸ்பீட் பிரேக் வந்ததில் பின்னால் உட்கார்ந்து இருந்த அவள், நிலை தடுமாறி தன்னையும் அறியாமல் கதிரை கட்டிக்கொண்டு விடுகிறாள். அவன் கட்டிக்கொண்டு இருக்கும் முல்லையின் கையைப் பார்க்கிறான். அவனுக்கு இப்படிப் பார்ப்பதும் ஒரு சுகமாகத்தான் இருக்கிறது போலும்.  அதில்தான் இது

என்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப கதை என்று சொன்னார்கள் இப்படியா ரொமான்ஸ் இருக்கிறது என்று சிலருக்கு எண்ணம் வரும், குடும்ப கதைதான்.. அதில்தான் இந்த இங்கிதமான ரொமான்ஸ் காட்சிகள்.

எதுவும் வரம்பு மீறவில்லை.. இப்படியான ரொமான்ஸ் காட்சிகளுக்குத்தான் இப்போது ரசிகர்கள் பெருகி இருக்கிறார்கள். என்ன இருந்தாலும் தமிழ் பண்பாடு அனைவர் உள்ளும் இருக்கிறது என்பதை சீரியல் பார்ப்பவர்களுக்கு உணர்த்தும் விதமாகவும் இந்த சீரியல் கதை இருக்கிறது.

Loading...