ஐ லவ் யூ’னு சொல்லிகிட்டே இருப்பேன்! அவரை நானும் மகனும் மிஸ் பண்றோம்… ரகுவரன் இறப்புக்கு பின் மகனை வளர்த்த கஷ்டம் குறித்து மனைவி ரோகிணி ஷேரிங்ஸ்

காதல் கணவர் ரகுவரனின் திடீர் இழப்புக்குப் பிறகு சிங்கிள் பேரன்ட்டாகத் தன் மகனை வளர்த்து ஆளாக்கிய பயணத்தைப் பகிர்ந்துகொள்கிறார் நடிகை ரோகிணி.

ரிஷியும் அவங்க அப்பா ரகுவும் ரொம்ப நெருக்கமா இருந்தவங்க. ரகுவுக்கு ரிஷியை அவ்வளவு பிடிக்கும். ரகுவோட திடீர் இழப்புலேருந்து ரிஷியால அத்தனை சுலபத்துல மீண்டு வர முடியலை

நானும் ரிஷியும் - நடிகை ரோகிணி

அம்மாவா மட்டுமில்லாம அப்பாவாகவும் பொறுப்புகளைச் சுமக்கிறது எனக்கு நிறையவே ஸ்ட்ரெஸ்ஸைக் கொடுத்திருக்கு. ஆனா, குழந்தைதான் உலகம்னு நினைக்கும்போது   சுமையா எதுவும் தெரியலை. நேரம் கிடைக்கிறபோது நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து படங்கள் பார்ப்போம். அவனுக்குப் பிடிச்ச படங்களை நானும் சேர்ந்து பார்ப்பேன்.

Loading...

என்னதான் சண்டை போட்டாலும், தூங்கறதுக்கு முன்னாடி எதையாவது பேசி, சிரிச்சுடுவோம். கவலையோடு அவனைத் தூங்க வெச்சதே இல்லை. `நீ பண்ணின குறும்புதான் என் கோபத்துக்குக் காரணமே தவிர, உன் மேல எனக்கு எந்தக் கோபமும் இல்லை… ஐ லவ் யூ’னு அவன்கிட்ட உணர்த்திக்கிட்டே இருப்பேன்.

நானும் ரிஷியும் - நடிகை ரோகிணி

என்னைப் பொறுத்தவரைக்கும் நான் ரிஷியை நல்லா வளர்த்திருக் கேங்கிற திருப்தி இருக்கு. ஆனாலும் பல நேரங்களில் நானும் ரிஷியும் ரகுவை ரொம்பவே மிஸ் பண்ணுவோம்.

ரகு ஸ்ட்ரிக்ட்டான அப்பாவா இருந்ததில்லை. நான் எதையெல்லாம் செய்யக்கூடாதுன்னு சொல்லிட்டிருப்பேனோ, அதையெல்லாம் செய்ய அவனை அனுமதிப்பார். சீஸ் சாப்பிடக்கூடாதுன்னு நான் சொன்னா, அவர் பையனுக்காக சீஸ் வாங்கி வைப்பார். அவர் இருந்திருந்தா ரிஷிக்கு இன்னும் அன்பு கிடைச்சிருக்குமேனு நினைப்பேன். டென்த்துல  ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தான். அது ரகுவுக்கு சந்தோஷம் தந்திருக்கும். `நீ என்ன பண்ணினாலும் அதுல பெஸ்ட்டா இருக்கணும்’னு சொல்லிட்டே இருப்பார். `நடிகராகணும்னா அமிதாப் பச்சனா வரணும்’னு சொல்வார்.

Image result for raghuvaran son

Loading...