நடிகர் பிரசன்னாவின் குழந்தையின் பெயருக்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கா? என்ன காரணம்ன்னு நீங்களே பாருங்க

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சினேகா. கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஹான் என்ற மகன் உள்ளார்.

திருமணத்திற்கு பின்னரும் சில படங்களில் நடித்து வந்த சினேகா அண்மையில் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் நடித்திருந்தார்.

அந்த படத்தில் நடித்துகொண்டிருக்கும் போதே சினேகா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சினேகா.

Loading...

ஏற்கனே சினேகா – பிரசன்னா தம்பதியினருக்கு ஒரு ஆண்குழந்தை இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த ஜோடிக்கு இரண்டாவதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள பிரசன்னா, ‘தங்கள் மகளுக்கு ஆத்யந்தா என்ற பெயர் வைத்துள்ளோம்.

ஆத்யந்தா என்றால் ஆதியும் அந்தமும் அற்றவள் என்பது பொருள். முதல் குழந்தை பெண்ணாக பிறக்கும் என்று நினைத்து ஆத்யாஎன்ற பெயரை தேர்வு செய்து வைத்தோம். ஆனால் அது நடக்கவில்லை. தற்போது பெண் குழந்தை பிறந்து இருப்பதால் அதே பெயரை கொஞ்சம் மாற்றி  ஆத்யந்தா என வைத்து விட்டோம்’ என கூறியுள்ளார்.

குழந்தை பிறந்து 15 நாட்கள் கழித்து இந்த தகவல் வெளியில் தெரியவதுள்ளது.இதற்கு ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியான வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வந்தனர்.

Loading...