சீரியல்ல ரொமான்ஸ் பண்றதைப் பார்த்து மனைவி கோச்சுக்கிட்டாங்க! ரொம்ப அவஸ்தைபட்டேன்… பூவே பூச்சூடவா நாயகன் ஷேரிங்ஸ்

பூவே பூச்சூடவா தொடரில் நடிப்பால் அனைவரையும் ஈர்த்து வருபவர் கார்த்திக் வாசு.

அவர் அளித்த பேட்டியில், “நான் பொறியியல் பட்டதாரி. சென்னைதான் சொந்த ஊர்.கல்லூரியின் கதை’ சீரியலில் நான் நடிக்கத் தேர்வாகி இருந்தேன். சந்தோஷம் தாங்க முடியல. இப்படிதான் என் சீரியல் என்ட்ரி நடந்தது. கல்லூரியின் கதை சீரியல் நல்ல அனுபவத்தைக் கொடுத்துச்சு.

மனைவியுடன் கார்த்திக் வாசு

பூவே பூச்சூடவா சீரியலில் நான் நடித்த முதல் எபிஸோட் டிவியில் வந்தபோது, நிறைய நெகட்டிவ் கமெண்ட்ஸ். `எங்க சிவா பாஸ் ரோலில் இவரா.. அப்படி இப்படின்னு கமெண்ட்ஸ் வந்துச்சு. பிரியமனவள் சீரியலில் நான் ரொம்ப துறுதுறு கேரக்டர் ஆனால் பூவே பூச்சூடவா அதற்கு நேரெதிராய் இருந்துச்சு. சிவா அப்படிங்கிற கேரக்டர் அதிகமா பேசவேமாட்டார். இப்போ கொஞ்சம் கொஞ்சமா சிவா கேரக்டர்குள்ள போக ஆரம்பிச்சிட்டேன். இப்போ நிறைய பாசிடிவ் கமெண்ட்ஸ் வருது. அதுவே எனக்கு போதும்’’ என்றார்.

Loading...
கார்த்திக் வாசு

“பூவே பூச்சூடவா சீரியலில் சக்தி கேரக்டர்கூட உங்க கெமிஸ்ட்ரி அள்ளுகிறது. அந்த ரொமான்ஸ் சீன்ஸ் பார்த்து உங்க மனைவி ரியாக்‌ஷன் என்ன?” என்னும் வில்லங்கமான கேள்வியை முன்வைத்தோம்.

'பூவே பூச்சூடவா' சீரியல் காட்சி

‘பூவே பூச்சூடவா’ சீரியல் காட்சி

ஆனா இப்போ பூவே பூச்சூடவா சீரியலில் நானும் சக்தியும் கண்களாலேயே பேசும் காட்சிகள் நிறையா வரும். அதை பார்த்துட்டு “என்ன பப்பு இப்படி ரொமான்ஸ் பண்ற. இப்படி பார்க்கிற’’ன்னு செல்லமா கோபப்பட்டாங்க. அட இது சீரியலுக்கு தேவைம்மா. கோவப்படக்கூடாதுன்னு சமாதானப்படுத்தினேன். உண்மையை சொல்லணும்னா எனக்கு இந்த ரோல் கிடைச்சுதுக்கு என்னவிட என் மனைவிதான் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க.

 

கார்த்திக் வாசு

Loading...