வலியுடன் அவஸ்தைபட்டு பிரிந்த உயிர்! கண்ணீர் வரவழைத்த கடைசி நொடிகள்… தூள் படத்தில் வில்லியாக மிரட்டிய சொர்ணாக்காவின் முடிவு

எப்பவுமே சினிமாவில் பிரபலமான ஹீரோ, ஹீரோயின் பெயர்களை வைத்து தான் அழைப்பார்கள். இது நடைமுறையில் ஒன்றான விஷயம்.

ஆனால், வில்லியின் பெயரை வைத்து கூப்பிடுவதும்,கிண்டல் செய்வதும் தற்போது பிரபலமாகி வருகிறது. ஆமாங்க,தூள் தமிழ் திரைப்படத்தின் வில்லி சொர்ணாக்கா.இவர் பெயரை பற்றி பேசாதவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள்.

Image result for 'தூள்' சொர்ணாக்கா

அந்த அளவிற்கு மக்களிடையே பிரபலமானவர். இந்த தூள் சொர்னக்கா யாரு? அவங்க உண்மையான பெயர் என்ன? அவர் எங்கிருந்து வந்தார்? என பல கேள்விகள் சினிமாவாக பிரபலங்களிடையேயும்,பொதுமக்களிடையேயும் அதிகமாக பேசப்பட்டு வந்தார்.

Loading...

இவரின் உண்மையான பெயர் சகுந்தலா ஆகும்.இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார்.இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் 1951 ஆம் ஆண்டு பிறந்தவர்.

இவர் திரைப்படங்களில் 1981ஆம் ஆண்டு தான் நடிக்க ஆரம்பித்தார்.அது மட்டும் இல்லைங்க மகாராஷ்டிராவில் மராட்டிய மொழிகளில் கூத்துப்பட்டறையில் நடித்து இருந்தார். பின்னர் தான் தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதற்காக தெலுங்கு மொழியை சீக்கிரமாகவே பேச கற்றுக்கொண்டார்.

Image result for 'தூள்' சொர்ணாக்கா

இவர் தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நகைச்சுவையாகவும், வில்லி கதாபாத்திரத்திழும்,முதன்மை கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

இவர் 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அது மட்டும் இல்லைங்க தெலுங்கில் 2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஒக்கடு’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவருக்கு சினிமா உலகில் பெயர், புகழ் வந்தது என்று கூட சொல்லலாம்.
ஆனால், நம்ம சொர்ணாக்கா ஹைதராபாத்தில் உள்ள கொம்பள்ளி என்ற பகுதியில் தான் வசித்து வந்தார். 2014 ஆம் ஆண்டு சனிக்கிழமை காலை திடீரென்று இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு துடிதுடித்தார்.
பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் ,தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா வட்டாரமே சோகத்தில் ஆழ்ந்தது என்று கூட சொல்லலாம்.
'தூள்' சொர்ணாக்கா புகழ் நடிகை சகுந்தலா மரணம்!
Loading...