என் கணவர் பற்றி எனக்கு தெரியும்! அவருடன் நெருக்கம்.. நடிகர் ஸ்ரீகாந்த் மனைவி வந்தனா ஷேரிங்ஸ்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் ஸ்ரீகாந்த் தனக்கு என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடத்தை பெற்றுள்ளார் என்றே கூறலாம்.

இவர் முதன்முதலில் ரோஜாக்கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆனார். இதன் பின்னர் மேலும் சில நல்ல திரைப்படங்களில் நடித்து பெரும் பெயர் பெற்றார். இவரது மனைவி பெயர் வந்தனா. இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன.

Image result for srikanth vandana

சமீபத்தில் வந்தனா ஸ்ரீகாந்த் அளித்த பேட்டியில், தன்னுடைய அன்பு கணவரை பற்றியும் அழகான குழந்தைகள் பற்றியும் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

Loading...

வந்தனா ஸ்ரீகாந்த் தன் கணவர் ஸ்ரீகாந்த் பற்றி மிகவும் பெருமையாக கூறினார். வந்தனாவும் ஸ்ரீகாந்தும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்ந்து வருவதாக கூறினார். ஸ்ரீகாந்திற்கு தேவையான எல்லாவற்றையும் நான் செய்வேன். எங்கள் இருவருக்கும் இடையில் எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லை. வாழ்க்கையின் ஒவொரு நொடியையும் நாங்கள் இருவரும் எங்கள் குழந்தைகளுடன் மிகவும் சந்தோஷமாக கழித்து வருகிறோம், என்று கூறினார்.

எனக்கும் ஸ்ரீக்கும் இடையில் நாள் கூட கூட அன்பு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது, காரணமாக இருப்பதே என் குழந்தைகள் இருவரும் தான் என்று கூறினார். எங்களுடைய இரண்டு குழந்தைகளுக்கும் அவர்கள் அப்பா தான் உலகம். அவர் இருந்தாலே போதும் எங்கள் பிள்ளைகளுக்கு ஜாலி தான்.

என் கணவரை பற்றிய அந்த மாதிரி கிசுகிசு! மனம் திறந்த நடிகரின் மனைவி!

உங்கள் கணவருக்கும் வேற சில நடிகைகளுக்கும் இடையில் கிசு கிசு பேசப்படும் போது உங்களுடைய ரீஆக்ஷன் என்னவாக இருக்கும்? என்று வந்தனாவிடம் கேள்வி கேட்டபோது, இதற்கு சற்றும் யோசிக்காமல் பதில் அளித்த வந்தனா, எனக்கும் என் கணவருக்கும் பொதுவான நண்பர்கள் அதிகம் பேர் உள்ளனர். குறிப்பாக ஐஸ்வர்யா தனுஷ், ஸ்ரீதேவி , சௌந்தர்யா போன்றோர்கள் எனக்கும் ஸ்ரீக்கும் நெருங்கிய நண்பர்கள். நங்கள் அனைவரும் ஒன்றாக நிறைய இடங்களுக்கு சென்று வருவது வழக்கம்.

இதேபோல் இன்னும் சில பேர் எங்களுடைய பொதுவான நண்பர்கள் ஆவர். நான் கூறியது போன்று எனக்கும் ஸ்ரீக்கும் இடையில் எந்த ஒளிவு மருவும் கிடையாது. ஆகையால் மற்றவர்கள் எவரும் ஸ்ரீயை பற்றி தவறாக கூறினாலும் எனக்கு அதை பற்றி கவலை ஒன்றும் இல்லை. என் கணவரை பற்றி என்னக்கு நன்றாக தெரியும், என்று மிகுந்த தன்னம்பிக்கையுடன் கூறினார்.

ஆகவே என் கணவரை பற்றி எந்த மாதிரியான கிசு கிசு வந்தாலும் நான் காதில் வாங்கி கொள்வதில்லை என்று தெளிவாக கூறினார் ஸ்ரீகாந்தின் மனைவி வந்தனா…

Image result for srikanth vandana

Loading...