அம்மா கூடை நிறைய களிமண்ணு எடுத்துட்டு உடைஞ்ச வீட்ட பொங்கல் அப்ப பூசுவாங்க! அவ்ளோ கஷ்டம் வீட்ல.. செந்தில் கணேஷ், ராஜலட்சுமி உருக்கம்

பொங்கல் பண்டிகை குறித்த நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி.

எங்க ஊரு புதுக்கோட்டை பக்கத்துல கரம்பக்குடி. பொங்கல்னா எனக்கு எங்கம்மாதான் மொதல்ல நினைவுக்கு வருவாங்க. அம்மா காட்டு வேலை, தோட்டத்து வேலைன்னு எந்நேரமும் வெளிவேலைகள்லதான் இருப்பாங்க. அம்மா கூடை நிறைய களிமண்ணு எடுத்துட்டு வந்தாங்கன்னா, இன்னும் ஒரு வாரம், பத்து நாள்ல பொங்கல் வரப்போகுதுன்னு அர்த்தம்.

நான் சின்னப்பிள்ளையா இருந்தப்போ, எங்க வீடு அங்கங்கே சுண்ணாம்பு, மண்ணெல்லாம் உதிர்ந்துபோய் கிடக்கும். அம்மா, தான் எடுத்துட்டு வந்த களிமண்ணைக் குழைச்சு சுவரு முழுக்கத் தீட்டுவாங்க.

Loading...

திண்ணை சேதமாகியிருந்தா, அதை மொத்தமா உடைச்சு எடுத்துட்டு களிமண்ணுலேயே புதுசா திண்ணை போடுவாங்க. சின்னச் சின்ன உடைசல் மட்டும் இருந்துச்சுன்னா களிமண்ணை அப்பி சமன்படுத்துவாங்க. அப்புறம் திண்ணை ஓரங்கள்ல காவி அடிச்சு, வாசல்ல புது அடுப்பு கட்டுனாங்கன்னா வீட்டுக்கு புது களை வந்துடும்.

Loading...