செம்பருத்தி சீரியல்ல அப்பா எதிர ரொமன்ஸ் பண்றது நல்லாயிருக்கா! அகிலாண்டேஸ்வரியால ட்விஸ்ட்.. ரசிகர்கள் எரிச்சலுக்கு காரணம் இருக்கு

ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் ஆதி பார்வதி கல்யாணத்தை சொல்லாமலே இன்னும் காதல் நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள்.

இன்னும் ஆதியின் பிறந்த நாள் அந்த 30ம் தேதி இரண்டு மாதங்கள் கழிந்தும் வரவில்லை.

ஆதிக்கு மித்ராவுடன் கல்யாண ஏற்பாடுகள் செய்துகிட்டு இருக்காங்க அகிலாண்டேஸ்வரி அம்மா.

காரில் காதல் பெரிய ஐயா ஆதியை பார்வதியின் அப்பா கார் டிரைவர் சுந்தரம் காரில் அழைச்சுக்கிட்டு, குடும்பமா கோயிலுக்கு போறார். பின்னாடி உட்கார்ந்து பெண்ணும், மாப்பிள்ளையும் ரொமான்ஸ் செய்துகிட்டு வர்றாங்க.

Loading...

பொண்ணு சொல்லுது.. உங்களை மாப்பிள்ளையா அடைய எங்க அப்பா குடுத்து வச்சு இருக்கணும்னு. அப்பாவை முன்னால் உட்கார்த்தி வச்சுக்கிட்டு, பின்னால உட்கார்ந்துகிட்டு பொண்ணு ரொமான்ஸ் பண்ணினா நல்லாவா இருக்கும்?

 காரில் காதல்

அம்மா கோயிலுக்கு அப்பாவுடன் கோயிலுக்கு வந்த மாதிரி, அம்மா நீங்க, நான் எல்லாம் குடும்பமா கோயிலுக்கு வரணும் மாமா. சொந்தகாரங்க கல்யாணத்துக்கு ஜோடியா போகணும்.. இந்த ஊரே பார்க்க உங்க கூட ஜோடியா சேர்ந்து எல்லா இடத்துக்கும் போகணும் மாமா அதுதான் என் ஆசை என்கிறாள் பார்வதி.

உன் ஆசை உன் ஆசை எல்லாம் சொல்லு பார்வதி.. அத்தனை ஆசையையும் நிறைவேத்தி வச்சு உன்னை சந்தோஷப் படுத்தறதுதான் என் ஆசை என்கிறான் ஆதி. இப்படி டயலாக் பேசி, காதல் செய்தே கால நேரத்தை கழிக்கிறார்கள், கொஞ்சமும் கதை இந்த இடத்தை விட்டே நகராமல் இருக்கிறதே என்று யாரும் நினைப்பதில்லை போலும். ஆதி பார்வதி ஆதி பார்வதி காதல், பின்னர் திருட்டு கல்யாணம்,

 அம்மா கோயிலுக்கு

அதை ரகசியமாக காத்து வைப்பது, திருட்டுத் தனமாக இருவரும் ரொமான்ஸ் செய்வது என்பது மட்டுமே கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலான கதை. உண்மையில் செம்பருத்தி சீரியல் இயக்குநர் ஆதி, பார்வதி, அகிலாண்டேஸ்வரி மூவரை மட்டுமே நம்பி கதையை நகர்த்தி வருகிறார். ஆனால், ஓரளவுக்கு மேல் ரசிகர்களுக்கும் இப்போது சலிப்புத் தட்டி வருகிறது.

 உன் ஆசை

Loading...