பல ஹிட் பாடல்களை பாடிய சொர்ணலதா 37 வயதிலேயே உயிரிழக்க உண்மை காரணம் என்ன? கண்ணீர் வரவழைத்த உண்மை காரணம்

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் சொர்ணலதா. கடந்த 1989ம் ஆண்டு முதல் பின்னணிப் பாடகியாக இருந்து வந்தார். தாய் மொழியான மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, உருது, படகா ஆகிய மொழிகளில் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.

எம்.எஸ்.விஸ்வநாதனால் நீதிக்கு தண்டனை (‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா…’) படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சொர்ணலதாவுக்கு, அடுத்தடுத்து ஏராளமான வாய்ப்புகளை வழங்கியவர் இளையராஜா. பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான், தேவா உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் படங்களிலும் நிறையப் பாடல்களைப் பாடியுள்ளார்.

1989-லிருந்து மேடைகளில் பாடி வந்தாலும், கேப்டன் பிரபாகரன் படத்தில் இடம்பெற்ற ‘ஆட்டமா தேரோட்டமா…’ ஒரே பாடல் அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது.Related image

சத்ரியன் படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் ‘மாலையில் யாரோ மனதோடு பேச…’ என்ற பாடலைப் பாடியதன் மூலம் இசை ரசிகர்களின் இதயங்களில் நீங்காத இடம்பெற்றார் சொர்ணலதா.

Loading...

அதன் பிறகு சின்னத்தம்பி, சின்னவர், சின்ன ஜமீன், குருசிஷ்யன், தளபதி, வள்ளி, வீரா, என் மன வானில் என ஏராளமான படங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

பாரதிராஜாவின் கருத்தம்மா படத்தில் ரஹ்மான் இசையில் இவர் பாடிய ‘போறாளே பொன்னுத்தாயி…’ பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது.

பாடல் பாடுவது தவிர கீ போர்ட், ஹார்மோனியம் வாசிப்பதிலும் வல்லவர் சொர்ணலதா.

37 வயதான சொர்ணலதா திடீரென நுரையீரல் தொற்று நோய் ஏற்பட்ட நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரின் இறுதி ஊர்வலத்தில் போறாளே பொண்ணு தாயி பாடல் ஒலிப்பரப்பட்டது.

Loading...