காலைலேந்து ஈவ்னிங் வரை இதான் வேலை! பயங்கரமா திட்டுவாங்க.. ஆனந்தம் சீரியல்ல கொடூர வில்லியாக நடித்த பிருந்தா தாஸின் தற்போதைய நிலை

நடிகை பிருந்தா தாஸ். சன் டிவி ‘ஆனந்தம்’ சீரியலில் அபிராமியாக மிரட்டியவர்.

அவர் அளித்த பேட்டியில், 2003-ம் வருஷம் தொடங்கின ‘ஆனந்தம்’ சீரியல், 2009-ல் முடிஞ்சது. கிட்டத்தட்ட அஞ்சரை வருஷப் பயணம். சைலன்ட் வில்லியா நடிச்சிருப்பேன். போகப்போக என் கேரக்டரைப் பார்த்து எனக்கே ஆச்சர்யம்.

எங்கே போனாலும், ‘அபிராமி’னு பாராட்டும் கிடைக்கும்; பயங்கரமா திட்டும் கிடைக்கும். என் நிஜ பெயரையே மறந்துட்டாங்க. அந்த சீரியல் என் மனசுக்கு ரொம்பவே நெருக்கமானது. அதில் வொர்க் பண்ணினது, மறக்கமுடியாத காலகட்டம்.

ரொம்ப காலமா நடிச்சாச்சு. ‘ஹாய் டா’னு ஒரு படமும் இயக்கினேன். ஒரு சேஞ்ச் வேணும்னு ஆசைப்பட்டேன். பர்சனல் காரணங்கள் எதுவுமில்லை. கார்ப்பரேட் நிறுவனத்தில் வொர்க் பண்ற வாய்ப்பும் கிடைச்சது.

Loading...

நடிகை என்கிற எந்தப் பிம்பத்தையும் காட்டிக்காமல் சராசரி பெண்ணாக அந்த வேலையைப் பண்ணிகிட்டிருக்கேன். இதுவும் சிறப்பா போயிட்டிருக்கு.”

Loading...