செம்பருத்தி சீரியல் ஆதிக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? அந்த பணத்தை வெச்சு அவர் என்ன செய்றார் பாருங்க

தமிழக ரசிகர்கள் மத்தியில் அதிக இடம் பிடித்த சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் “செம்பருத்தி” தான். இந்த செம்பருத்தி சீரியல் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அதோடு இந்த தொடர் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர் ஆகும். அது மட்டும் இல்லாமல் தெலுங்கில் வெளியான ‘முத்த மந்தாரம்’ என்ற தொடரை தழுவி எடுக்கப்பட்டது தான் இந்த செம்பருத்தி சீரியல். இந்த சீரியலில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் ஷபானாவும், அகிலாண்டேஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் பிரியா ராமனும் நடித்து வருகிறார்கள்.

Image result for sembaruthi serial aadhi

இந்த செம்பருத்தி சீரியல் இந்த அளவிற்கு முதலில் இடத்தில் இருப்பதற்கு காரணம் கதைக் களம், ஆதி–பார்வதி இடையேயான காதல், நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு என்று சொல்லலாம்.

நடிகர் கார்த்திக் அவர்கள் எதையுமே நேருக்கு நேராக வெளிப்படையாக பேசும் இயல்புடையவர். இதனாலேயே இவர் சினிமா உலகில் பல எதிரிகளை சம்பாதித்து உள்ளார் என்று சமீபத்தில் நடந்த விருது விழாவில் மேடையில் அவரே கூறியிருந்தார். கார்த்திக் அவர்கள் இயல்பாகவே அன்பு செலுத்தும் குணம் உடையவர். இந்நிலையில் நடிகர் கார்த்திக் ராஜ் தான் சம்பாதிக்கும் பணத்தில் பல ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக உதவி செய்து வருகிறாராம்.

Loading...

செம்பருத்தி சீரியலில் நடிகர் கார்த்திக் ராஜ் அவர்களுக்கு ஒரு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குவதாக கூறப்படுகிறது. இந்த பணத்தில் இருந்தும் இவர் பல ஏழை குழந்தைகளுக்காக செலவிட்டு வருகிறார். ஆனால், இது உண்மையா என்பது உறுதியாக தெரியவில்லை.

Loading...