கல்யாண வீடு சீரியல்ல கோபியோட ஸ்வேதா இப்படி பண்ணலாமா? டென்ஷனான ரசிகர்கள்… காரணம் இது தான்

தொலைக்கட்சி சீரியல்களில் ரொம்ப டென்சன் ஆகற மாதிரி காட்சிகளோ.. கதாபாத்திரங்களோ வைக்காதீர்கள் என்று, சின்னத்திரைக்கு ஒரு சென்சார் போர்டு வைக்க வேண்டிய அவசியம் வந்துவிட்டது.

சன் டிவியின் கல்யாண வீடு சீரியல் நிலைமை கட்டுக் கடங்காமல் சென்று கொண்டு இருக்கிறது.

எங்கே குறை, எப்படிப்பட்ட குறை என்று தெடிக் கண்டு பிடித்து அதை மட்டுமே சீரியல் கதையாக கொண்டு சென்று இருக்கிறார் இயக்குநர் திருமுருகன்.

கலா சிஸ்டர்ஸ் வரும் காட்சிகளை மிக மோசமாக காண்பிச்சு இருக்கார். இப்படியும் பெண்கள் இருப்பார்களா என்கிற சந்தேகம் வருது. பெண்களை இவ்வளவு கேவலமாக சித்தரிக்க திருமுருகனால் மட்டுமே முடியும். வீட்டில் உள்ள அத்தனை வேலைகளையும் விட்டுவிட்டு புறணி பேச எங்கு வேண்டுமானாலும் திரிவது போல காண்பித்து இருக்கார். சென்சார் தேவை

Loading...

கலா அண்ட் சிஸ்டர் வாயில் வரும் வார்த்தைகள் அவ்வளவு கொடூரமானதா இருக்கு. எண்ணங்களும் அவ்வளவு கீழ்த்தரமான எண்ணங்கள். இதுக்கும் மேல இதை காண்பிச்சா நிச்சயமா நாடு தாங்காது. நிஜத்தில் இப்படி கேவலமாவாங்க கூட யாருமே சகவாசம் வச்சுக்க மாட்ட்டாங்க. இந்நேரத்துக்கு ஊரை விட்டே கூட ஒதுக்கி வச்சு இருப்பாங்க. இப்படி உறவினர் மத்தியில சகஜமா இருக்க முடியாது.

ஸ்வேதா தன் புருஷனோட சந்தோஷமா இருக்கான்னு நினைக்கும்போது, அவனுக்கு கோபி ஸ்வேதா கல்யானம் வரை போன விஷயம் தெரிஞ்சு போகுது. பொண்டாட்டி மேல சந்தேகம்.. சரி சந்தேகத்தை தெளிய வைக்கும் நல்ல மனைவியா ஸ்வேதா இருக்கான்னு அதோட விட்டுடலாம் இல்லையா?

கோபியுடன் ஸ்வேதா எடுத்த போட்டோ, விருந்தாளியாக போன வீட்டு பரண் மேல் கிடைக்கிறதாம். எப்படிங்க அது அங்கே போயி கிடக்கும். அவங்க இருக்கறதே பேயிங் கெஸ்டா..அங்கே போயி ஏன் அந்த போட்டோவை எடுத்து பரண் மேலே போடப் போறாங்க? சரி அதை விடுங்க சந்தேகத் தீயை மேலும் மேலும் வளர்த்து ஆடியன்ஸ் டென்ஷனை இன்னும் இன்னும் என்று அதிகப்படுத்தி குளிர் காயறீங்களே ஏன்? ஸ்வேதா புருஷன்

தினம் ஒரு ஸ்லாட் வாங்கி டிவி சீரியல் தரும் உங்களுக்கு மக்களின் நலன் மேல் அக்கறை பொறுப்பு வேணாமா? எப்போதும் ஒருவித டென்ஷன்லேயே உங்கள் சீரியலை விரும்பி பார்க்கும் மக்களை வச்சு இருக்க வேண்டும் என்பதுதான் உங்க விருப்பமா? எதுக்கு ராத்திரியானா மனதை அமைதி படுத்திட்டு தூங்குங்கன்னு சொல்றாய்ங்க..? அவசியம் சென்சார் தேவை!

Loading...