கோலங்கள், தென்றல் சீரியல் நடிகை ஸ்ரீவித்யாவுக்கு தற்போது இப்படியொரு நிலைமையா! ஒரு டைம்ல ரசிகர்ளுக்கு பிடிச்ச நடிகையாச்சே!!

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், என்னவளே படங்களில் குழந்தை நட்சத்திரமாக திரைத்துறைக்குள் காகடி எடுத்து வைத்தவர் நடிகை ஸ்ரீவித்யா.

சின்னத்திரையிலும் கோலங்கள், தென்றலில் நடித்து ஸ்கோர் செய்தவர். வெள்ளித்திரையை விட, இவரின் சின்னத்திரை நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.

அதேபோல் சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான ‘ஜில்லுன்னு ஒரு காதல்’ படத்திலும் சப்போர்ட்டிங் ரோலில் நடித்திருப்பார். இதுபோக சிவசக்தி, முந்தானை முடிச்சு சீரியல்களிலும் நடித்திருந்தார். கோலங்களில் இவரது ஆர்த்தி கேரக்டர் வெகுவாகப் பேசப்பட்டது. தன் இடைவிடாத நடிப்புக்கு இடையே, எம்.பி.ஏ படித்து முடித்த ஸ்ரீவித்யா, தன் உறவினர் ஒருவரையே திருமணமும் செய்தார்.

மேரேஜ்க்கு பின், கணவர், குழந்தை என வாழ்ந்த ஸ்ரீவித்யா நடிப்புக்கு சின்ன பிரேக் விட்டார். பாடிய வாயும், ஆடிய காலும் சும்மா இருக்காது என கிராமங்களில் சொல்வதுபோல, மீண்டும் சித்திரம் பேசுதடி, கைராசி குடும்பம் நாடகங்களின் மூலம் சின்னத்திரைக்குள் ரீ எண்ட்ரி ஆனார். இப்போது நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு சொந்தத் தொழிலில் இறங்கி விட்டார் ஸ்ரீவித்யா.

Loading...

என்ன தொழில் என்றா, வெளிநாடுகளில் ‘கிளவுட் கிச்சன்’ என்னும் கான்செப்ட் ரொம்ப பேமஸ். அதாவது சிட்டியில் தங்கி வேலை செய்யும் பேச்சிலர்களுக்கு சுவையான உணவை சமைத்துத் தரும் கம்பெனி அது. அதேபோல் சென்னையில் ஒன்றை துவங்கி தன் எம்.பி.ஏ மூளையால் நிர்வாகம் செய்து வருகிறார் ஸ்ரீவித்யா.

 

Loading...