வசதியும், புகழும் வந்த பின்னர் முதல் மனைவியை விட்டு விலகிய நடிகர் பிரகாஷ்ராஜ்! இப்படிப்பட்டவரா அவர்.. பலருக்கும் தெரியாத தகவல்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை வில்லன் என்றாலே ஞாபகத்திற்கு வருவது பிரகாஷ்ராஜ் தான்.

ரகுவரனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்துக்கு என பொருத்தமாக இருப்பவர் பிரகாஷ்ராஜ். அவர் பெங்களூரில் 1965-ம் ஆண்டு ஒரு சாதாரன குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு பிரசாத் ராய் என்னும் ஒரு சகோதரரும் உள்ளார்.

இவர் பெங்களூரில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்துள்ளார் பிரகாஷ் ராஜ். அதன் பின் பிரகாஷ் ராய் என்னும் தனது பெற்றோர் வைத்த பெயரை இயக்குனர் சிகரம் கே. பாலசந்திரனின் அறிவுரையினால் பிரகாஷ்ராஜ் என மாற்றிக் கொண்டார்.

Loading...

இயக்குனர் கே. பாலசந்திரனின் உதவியாலராக பணிப்புரிந்தவர் லலிதா குமாரி. பாலச்சந்தர் இயக்கத்தில் பல படங்களில் நடித்த லலிதாகுமாரி தான் பிரகாஷ்ராஜிடம் அவரை அறிமுகம் செய்து வைத்தார், இதையடுத்தே அவருக்கு டூயட் பட வாய்ப்பு கிடைத்தது.

லலிதா குமாரி என்பவர் தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். இவர் நடிகர் சி. எல். ஆனந்தனின் மகளும், டிஸ்கோ சாந்தியின் சகோதரியும் ஆவார். இவர் மனதில் உறுதி வேண்டும் (1987 திரைப்படம்), புதுப்புது அர்த்தங்கள், புலன் விசாரணை, சிகரம் போன்ற படங்களில் நடித்துள்ளார் லலிதா குமாரி.

முதல் மனைவி லலிதா குமாரிக்கும் பிரகாஷ் ராஜுக்கும் இடையே ஒரு நட்பு ஏற்ப்பட்டு பின் அது காதலாக மாறியது. பின் 1994-ம் ஆண்டு பிரகாஷ் ராஜ் லலிதா குமாரி இருவருக்கும் திருமணம் நடந்தது. இதன்பின்னர் பல படங்களில் நடித்து பேரும் புகழும் பெற்ற பிரகாஷ்ராஜ் லலிதாகுமாரியை திருமணம் செய்து கொண்டார் அவ்விருவருக்கும் இரு மகள்கள் மற்றும் ஒரு மகனும் உள்ளார்கள். மேக்னா, பூஜா மகள்களும் சித்து என்னும் மகனும் உள்ளார். ஆனால் 2004-ல் அவர்களது ஒரே மகனான சித்து இறந்து விட்டார்.

2009-ல் சில மன வருத்தங்கள் ஏற்பட்டு லலிதா குமாரியை விவாகரத்து செய்தார். அதன் பின் பிரகாஷ் ராஜ் தான் ஒரு நாத்திக வாதி என கூறினார். ஆனால் புகழும், பணமும் அதிகமாக தனக்கு உதவிய லலிதாகுமாரியை மறந்த பிரகாஷ்ராஜ் அவரை விவாகரத்து செய்தார். லலிதாவை விவாகரத்து செய்த பிரகாஷ்ராஜ் 2010-ம் ஆண்டு பயிற்சியாளரான பொனி வர்மா என்ற பெண்ணை மறுமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2016-ம் ஆண்டு வேதாந்த் என்னும் ஒரு மகன் பிறந்துள்ளார்.

Loading...