பாக்கியராஜ் மகன் நடிகர் சாந்தனுவை விமானத்தில் அசிங்கமாக திட்டிய அழகான பெண்கள்! நடந்தது என்ன? அவரின் பரிதாப நிலை

இயக்குனர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு, தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார். தனா இயக்கத்தில் அவர் நடித்துள்ள வானம் கொட்டட்டும் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் சாந்தனு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலை 2 மணிக்கு சென்னை வந்த ஏர் இந்தியா விமானத்தில் பணிப்புரியும் மூன்று பணிப்பெண்கள் தன்னை இந்தியில் அசிங்கமாக பேசியதாக கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் லக்கேஜ் ஸ்கிரினீங்கிற்காக தான் வரிசையில் காத்திருந்தபோது, ஏர் இந்தியா விமானப் பணிப்பெண்கள் மூன்று பேர் வரிசையில் நிற்காமல் அத்துமீறி சென்று லக்கேஜ் ஸ்கிரினீங் செய்ததாகவும், அதுகுறித்து தான் கேட்டபோது தன்னை இந்தியில் அசிங்கமாக திட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Loading...

தங்களை எதுவும் செய்ய முடியாது என்ற தலைக்கனத்தில் அவர்கள் நடந்துகொண்டதாகவும் சாந்தனு கூறியுள்ளார்.

Loading...