குழந்தை பருவ தோழியை காதலித்த நடிகர் விமல்! பெண் வீட்டில் எதிர்ப்பு… ஓடி போய் திருமணம் செய்ததால் விபரீதம்

தமிழ் சினிமாவில் பசங்க படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர்  நடிகர் விமல்.

பின்னர் களவாணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர்   கடந்த 2010 ஆம் ஆண்டு தனது தோழியான அக்சயா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், இவர்களது திருமணம் அவ்வளவு எளிதாக நடக்காமல் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு நடந்துள்ளது.நடிகர் விமல் தனது குழந்தை பருவ தோழியான அக்சயாவை, அவர் படிக்கும் கல்லூரிக்கு அடிக்கடி சென்று பார்த்து வந்துள்ளார்.

Loading...

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனை அறிந்த அக்சயாவின் பெற்றோர் தனது மகள் மருத்துவருக்கு படிக்கிறாள்.அதனால் அவரை ஒரு மருத்துவருக்குதான் கட்டி கொடுப்போம் என காதலுக்கு தடை போட்டுள்ளனர்.

இதனையடுத்து அக்சயாவுக்கு மாப்பிள்ளை பார்க்க முயன்ற போது அக்சயா காதலன் விமல் சூட்டிங்கில் இருந்த இடத்திற்கு வீட்டிலிருந்து புறப்பட்டு வந்து விட்டார்.

பின்னர் நடிகர் விமல்  ஒரு கோவிலில் வைத்து அக்சயாவை திருமணம் செய்துகொண்டார்.பின்னரும் பெண் வீட்டார் விமலை ஏற்காத நிலையில் பல்வேறு சமாதானத்துக்கு பின்னர் ஏற்றனர்.

இப்படி ஒரு பரபரப்பு திருமணம் செய்து கொண்ட நடிகர் விமல் மனைவியுடன் தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.

Loading...