கோடிகளில் புரளும் யோகிபாபு… சம்பளமாக வாங்கும் பணத்தை என்ன செய்கிறார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு பஞ்சம் தான். காரணம் உண்மையான காமெடி எப்படி செய்வது என தெரியாமல் இருப்பது தான். ஒரு காலத்தில் நாகேஷ், கவுண்டமணி, செந்தில், வடிவேலு என்பவர்கள் நகைச்சுவையான உடல் மொழியாலும் நக்கல் பேச்சாலும் தமிழ் சினிமாவை ஆண்டவர்கள்.

தற்பொழுது டபுள் மீனிங் காமெடி, அடுத்தவரை கிண்டல் செய்வது, தவறாக இங்கிலீஷ் பேசுவது என்பதெல்லாம் தான் காமெடி என நினைத்துக்கொண்டு சமீபகாலமாக திரையில் நடித்துக்கொண்டு உள்ளனர்.

இவர்களுக்கு மத்தியில் பார்த்தவுடனேயே சிரிக்கும் தோற்றத்தைக் கொண்டு வித்தியாசமான காமெடி காட்சிகளை ரசிகர்களுக்கு வழங்கி முன்னணி நாயகனாக உயர்ந்திருப்பவர் யோகி பாபு.
இவரை திரையில் பார்த்தாலே சிரித்து விடுகின்றனர் மக்கள்.

இதனால் இவருக்கு முன்னணி நடிகர்களின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு தானாகவே வருகிறது. இதனால் தற்போது ஒரு நாளைக்கு 3 முதல் 5 லட்சம் வரை சம்பளமாக பெறுகிறார். இந்த பணத்தை எல்லாம் நிலங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார் யோகி பாபு.

Loading...

சமீபத்தில் கூட மிகப்பெரிய பொருட்செலவில் வீடு ஒன்று வாங்கி குடியேறினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விரைவில் திருமணமும் நடைபெற இருப்பதால் நண்பர்களின் அறிவுரைப்படி சொத்துக்களை வாங்கிக் குவித்து வருகிறார் யோகி.

யோகிக்கு யோகம் அடிச்சு ரொம்ப நாளாச்சு..

Loading...